News
தளபதி 66ல் இவர்தான் வில்லனாம்..! – மேலும் பல ஆச்சர்யங்களுடன் வந்த அப்டேட்!
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதுபோல சரத்குமார், பிரபு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியமான சில நடிகர்களும் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தின் பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக பாலகிருஷ்ணா நடித்து வெளியான “அகண்டா” படத்தில் வில்லனாக நடித்தவர் ஸ்ரீகாந்த்.
மேலும் படத்தில் தமிழ் நடிகர் ஷாம் மற்றும் சங்கீதா உள்ளிட்டோரும் நடிப்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
