Connect with us

கமல் எதை செய்யக்கூடாதுன்னு சொன்னாரோ அதையே செஞ்சி மாட்டிக்கிட்டேன்!.. ஓப்பனாக கூறிய கார்த்தி!.

kamal karthi

Tamil Cinema News

கமல் எதை செய்யக்கூடாதுன்னு சொன்னாரோ அதையே செஞ்சி மாட்டிக்கிட்டேன்!.. ஓப்பனாக கூறிய கார்த்தி!.

Social Media Bar

வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்பிய நடிகர் கார்த்தி, அதற்கு சம்பந்தமே இல்லாமல் அடுத்து நடித்த திரைப்படம்தான் பருத்திவீரன். பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்தி நடிப்பை கண்டு தமிழ் சினிமாவே வியந்து விட்டது என்று கூறலாம்.

ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படம் அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தை கொண்ட திரைப்படமாக இருந்தது. பையா என்னும் அந்த திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த இரு வேறு கதாபாத்திரங்களை பார்த்த பொழுது கமல் அது குறித்து கார்த்தியிடம் ஒரு விஷயத்தை கூறியதாக கார்த்தி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அப்போது கார்த்தியை சந்தித்த கமல் சினிமாவை பொறுத்தவரை ஒரே மாதிரியான கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொண்டு அதையே மாற்றி மாற்றி ஒவ்வொரு படங்களிலும் காட்டிக் கொண்டிரு. அப்பதான் சினிமாவில் பல காலம் இருக்க முடியும். அதை நான் செய்யாததினால் தான் என்னால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.

ஏனெனில் கமல்ஹாசன் பல மாறுபட்ட கதாபாத்திரங்களை எடுத்து நடிக்கக் கூடியவர். ஆனால் விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தை கொண்டு வேறு வேறு கதைகளத்தில் நடிக்கக் கூடியவர்கள்.

ஆனால் கார்த்தி அப்பொழுதும் அதைக் கேட்காமல் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து வந்தார். ஆனால் அது அவருக்கு வெற்றியை கொடுத்து வருகிறது. இருந்தாலும் ஆரம்பத்தில் கமல் அப்படியான ஒரு ஆலோசனையை கொடுத்தார் என்று கார்த்தி தன் பேட்டியில் கூறியுள்ளார்.

To Top