Connect with us

ப்ளூ சட்டை மாறன்லாம் ஒரு ஆளா?.. கடுப்பாகி கழுவி ஊத்திய கங்குவா நடிகை.!

blue sattai maaran

Tamil Cinema News

ப்ளூ சட்டை மாறன்லாம் ஒரு ஆளா?.. கடுப்பாகி கழுவி ஊத்திய கங்குவா நடிகை.!

Social Media Bar

Suriya starrer kanguva has been receiving negative reviews. Famous critic Blue Sattai Maran has also spoken about this movie

சமீபத்தில் திரையரங்குகளில் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஒரு திரைப்படமாக கங்குவா அமைந்திருக்கிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெகு காலங்களாகவே எடுக்கப்பட்டு வந்த திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்தார்.

ஞானவேல் ராஜாவை பொறுத்தவரை மலை போல் இந்த தி.ரைப்படத்தை அவர் நம்பி இருந்தார். இந்திய அளவில் கண்டிப்பாக கே.ஜிஎப் மாதிரி பேசப்படும் ஒரு படமாக கங்குவா இருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது.

எதிர்மறையான விமர்சனம்:

ஆயிரம் கோடியை தாண்டி கங்குவா திரைப்படம் வசூல் கொடுக்கும் என்பது ஞானவேல் ராஜாவின் ஆசையாக இருந்தது. நிறைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்களை பெற துவங்கியது.

kanguva

kanguva

ஆனால் அதிக எதிர்பார்ப்பு இருந்த காரணத்தினால் முதல் நாள் அதிகபட்சமான திரையரங்குகள் முழுமை அடைந்து இருந்தன. இதனை தொடர்ந்து நல்ல வசூலையும் முதல் நாளே பெற்றது கங்குவா திரைப்படம். அதற்கு பிறகு மற்ற நாட்களில் அதன் டிக்கெட் விற்பனை குறைந்து இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தை பார்த்து வந்த மக்கள் பெரும்பாலும் படத்தை மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர் முக்கியமாக பாடத்தில் ஒலி அளவு மிக அதிகமாக இருப்பதாகவும் அதனால் படம் பார்ப்பதே கஷ்டமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறினர்.

திரையரங்குகளில் பிரச்சனை:

அதனை தொடர்ந்து தற்சமயம் ஒலி அளவை குறைக்குமாறு திரையரங்குகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த நிலையில் பெரும்பாலும் திரைப்படங்களை எதிர்மறையான விமர்சனம் செய்யும் பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கங்குவா திரைப்படத்தை மிக மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.

sabitha roi

sabitha roi

சங்குவா திரைப்படத்தில் நடித்த நடிகை சபிதா ராய் இதனால் கோபமடைந்து பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சினிமா என்றால் என்னவென்றே ப்ளூ சட்டை மாறனுக்கு தெரியாது.

இந்த மாதிரி எங்கள் திரைப்படங்களை எல்லாம் மோசமாக பேசாவிட்டால் அவர் யார் என்று மக்களுக்கும் தெரியாது. அவ்வளவுதான் ப்ளூ சட்டை மாறன். பத்து நீல நிற சட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டு வீடியோ போடுகிறார். ஆனால் ஒரு காட்சியை படமாக்க சொன்னால் கூட அவருக்கு எடுக்க தெரியாது என்று விமர்சித்திருக்கிறார் சபிதா ராய்.

To Top