Connect with us

எந்திரன் 2.0, கே.ஜி.எஃப் சாதனையை முறியடித்த கங்குவா.. வெளியாவதற்கு முன்பே மாஸ் காட்டிய சூர்யா.!

kanguva

Tamil Cinema News

எந்திரன் 2.0, கே.ஜி.எஃப் சாதனையை முறியடித்த கங்குவா.. வெளியாவதற்கு முன்பே மாஸ் காட்டிய சூர்யா.!

Social Media Bar

Suriya starrer Kanguva is releasing on November 14th and there is a lot of anticipation about this movie. Meanwhile, this film has created a new record.

தற்சமயம் தமிழில் மாபெரும் பொருட் செலவில் உருவாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது.

நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார்.

தமிழில் பெரும்பாலும் சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வெற்றி கிடைத்து வருகிறது. ஆனால் கங்குவா திரைப்படத்தை பொருத்தவரை சூர்யாவே இந்த படத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

surya kanguva

surya kanguva

சூர்யாவின் புது சாதனை:

சிறுத்தை சிவா இந்த படத்தின் கதையை கூறிய பொழுது சூர்யாவிற்கு பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தா.செ ஞானவேலுடன் நடிக்கவிருந்த ஒரு திரைப்படத்தை விட்டு விட்டுதான் கங்குவா திரைப்படத்திற்கு நடிக்க சென்றார் சூர்யா இந்த நிலையில் கங்குவா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இந்திய அளவில் பெரும் சாதனையை படைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது இந்திய அளவில் அதிக ஸ்கிரீன்களில் வெளியான திரைப்படங்கள் என்று ஒரு லிஸ்ட் உண்டு. அதில் முதலிடத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் இருக்கிறது. ஜவான் திரைப்படம் பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியானது.

பிறகு ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் 9000 திரையரங்குகளில் வெளியானது. ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் 8900 திரையரங்குகளில் வெளியானது இப்படி இருக்கும் பொழுது தற்சமயம் இவற்றையெல்லாம் தாண்டி கங்குவா திரைப்படம் உலகம் முழுக்க 15,000 ஸ்க்ரீன்களில் வெளியாக இருக்கிறது. இந்திய அளவிலேயே அதிக ஸ்கிரீன்களில் வெளியான திரைப்படமாக கங்குவா இருக்கும் என்று கூறப்படுகிறது.

To Top