கோட் அமரன் திரைப்படத்தை மிஞ்சிய கங்குவா.! பாக்ஸ் ஆபிஸில் வேட்டை.. இதை எதிர்பார்க்கல.!
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சமீபத்தில் வெளியான திரைப்படம் கங்குவா. கங்குவா திரைப்படம் உருவான காலகட்டத்தில் இருந்து அந்த படம் குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன.
இந்த நிலையில் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெற வேண்டும் என்பது பலரது நம்பிக்கையாக இருந்தது. இதனால் நடிகர் சூர்யாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் தொடர்ந்து இந்த படம் குறித்து பிரமோஷன் செய்து வந்தனர்.
ஆனால் படம் வெளியான பொழுது மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் இல்லை என்கிற பேச்சு எழ துவங்கியது இதனை அடுத்து அந்த படத்தை பலரும் விமர்சிக்க துவங்கினர். இந்த படம் தமிழில் ஒரு பக்கம் என்னதான் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் கூட கங்குவா நன்றாக இருப்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

கங்குவா வசூல்:
தமிழ் ரசிகர்கள் மத்தியில் கங்குவா திரைப்படத்தின் நிலை இப்படி இருக்க வெளிநாடுகளில் கங்குவா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடி கொண்டிருக்கிறது. நிறைய நாடுகளில் கங்குவா திரைப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
முக்கியமாக ரஷ்யாவில் கங்குவா திரைப்படம் எதிர்பார்த்ததை விட நல்ல வெற்றியை கொடுத்து கொண்டு வந்துள்ளது. தற்சமயம் ரஷ்யாவில் கங்குவா திரைப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே ரஷ்யாவில் வெளியான கோட் அமரன் திரைப்படத்தை விடவும் தற்சமயம் கங்குவா திரைப்படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. உலக அளவில் பார்க்கும் பொழுது எப்படியும் கங்குவா திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.