Connect with us

பொன்னியின் செல்வன் படத்தை தாண்டிய காட்சிகள்.. கங்குவா ட்ரைலர் ரிவீவ்!..

surya ganguva

News

பொன்னியின் செல்வன் படத்தை தாண்டிய காட்சிகள்.. கங்குவா ட்ரைலர் ரிவீவ்!..

Social Media Bar

Kanguva Movie Trailer: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் இறுதியாக சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் ஒரு காட்சியில் நடித்திருந்தார். அது பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் வரவேற்ற பெற்ற நிலையில், அனைவரும் அவரை அந்த கதாபாத்திரத்தின் பெயரை வைத்து தான் சூர்யாவை அழைத்து வந்தார்கள்.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது கங்குவா படத்தின் டிரைலர் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா. இவருடைய சகோதரர் கார்த்திக் பிரபல தமிழ் சினிமா நடிகர் ஆவார்.

நடிகர் சூர்யா பல தமிழ் படங்களில் நடித்து வந்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். மேலும் அவர் நடிக்கும் அத்தனை படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெறும்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படமும் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை.

சூர்யாவின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் திரையில் வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் எந்த படமும் வெளியாகாத நிலையில் தற்போது சூர்யாவின் ரசிகர்கள் கங்குவா படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

kanguva

முன்னதாக கங்குவா படத்தில் போஸ்டர் மட்டும் வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியது. தற்பொழுது கங்குவா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

கங்குவா படத்தின் டிரைலர்

இயக்குனர் சிவாவின் பிரம்மாண்ட படைப்பான கங்குவா படத்தை நடிகர் சூர்யா நடித்து வரும் வேளையில், பெரிய அளவிலான பொருட் செலவில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. மேலும் உலக அளவில் இந்த திரைப்படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது.

தற்போது கங்குவா படத்தின் டிரைலர் போர்க்களம், எதிரி,பகை என மொத்தத்தையும் உள்ளடக்கியதாகவும், கங்குவா என்ற கதாபாத்திரத்துடன் நடிகர் சூர்யா, மாஸான தனது என்ரியை கொடுத்திருக்கிறார். சண்டியிடும் காட்சிகளில் மாபெரும் வீரனாக கங்குவா என்ற கதாபாத்திரத்தில் சூர்யாவை இந்த ட்ரெய்லரில் பார்ப்பதற்கு உடம்பெல்லாம் புல்லரிப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.

kanguva

கங்குவா பாடத்தின் டிரைலரை பார்த்த பலரும், படத்தின் டிரைலர் பாகுபலி போன்று உள்ளதாக கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். எனவே பாகுபலி அளவிற்கு படம் மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் தற்போது தமிழில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை நிச்சயம் முறியடிக்கும் என்றும், கங்குவா ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்யும் எனவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

To Top