Cinema History
புது ட்ரெண்டை கொண்டு வந்தார் கண்ணதாசன்.. அதை காபி அடிச்சி நான் ஒன்னு பண்ணுனேன்.. வாலி ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான பாடல் ஆசிரியர்களில் மிக மிக முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் பிரபலமான கவிஞர்கள்தான் பாடல் ஆசிரியர்களாக இருந்து வந்தனர்.
கண்ணதாசன் பல விஷயங்களை தமிழ் சினிமாவில் மாற்றி அமைத்துள்ளார் அதில் முக்கியமானது சோக பாடல்கள். பொதுவாக காதலனை காதலி பிரிந்து விட்டால் பொன்னான வாழ்வு மண்ணாகி போச்சே போன்ற சொற்கள் தான் கண்ணதாசனுக்கு முன்பு சோகப்பாடல்களில் இருந்தன.
ஆனால் ஒரு பொதுவான வார்த்தையை கண்ணதாசன் பயன்படுத்த தொடங்கினார். காதலன் காதலி இருவரையும் குறை சொல்லாமல் இருந்தன அவரது பாடல் வரிகள். அவரது பாடல்களில் நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா என்று யாரையும் குற்றம் சொல்லாத வார்த்தைகளை பயன்படுத்தினார் கண்ணதாசன்.
அதையே பின்பற்றிய வாலி தனது பாடல்களில் உறவு என்றொரு சொல்லிருந்தால் அதற்கு பிரிவு என்ற ஒரு பொருள் இருக்கும் என்று எழுதினார் வாலி. அஜித் நடித்து வெளியான மங்காத்தா திரைப்படத்தில் கூட என் நண்பனே என்கிற ஒரு சோகப் பாடலை பாடியிருப்பார் வாலி அதிலும் கூட மோசமான வார்த்தைகளை பயன்படுத்தாமல் காதல் என்பது கனவு மாளிகை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார்.
ஆனால் தற்சமயம் உள்ள காதல் சோகப் பாடல்களில் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தகவல்களை தனது பேட்டியில் அவர் பகிர்ந்து எடுத்தார்.
