Cinema History
அவசரமா பணம் தேவைப்படுது!.. 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய 8 பாடல்கள்!.. என்ன மனுசன்யா…
தமிழில் உள்ள பாடலாசிரியர்களில் முக்கியமானவர் பாடலாசிரியர் கண்ணதாசன். கண்ணதாசனை போல இன்னொரு பாடலாசிரியரை தமிழ் சினிமா சந்திக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு எந்த ஒரு இசையை கொடுத்து அதற்கு பாடல் வரிகள் எழுத சொன்னாலும் பத்து நிமிடத்தில் பாடல் வரி எழுதி கொடுத்துவிட்டு சென்று கொண்டிருப்பார் கண்ணதாசன்.
அதனாலேயே கண்ணதாசனுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு இருந்தது. மேலும் சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் போன்றோடின் பாடல்களுக்கு அவர் எழுதிய வரிகள் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனையே வியக்க வைத்துள்ளது என்று கூறலாம்.
இந்த நிலையில் கிருஷ்ணனை வைத்து 8 பாடல்கள் உருவாக்க திட்டமிட்டு இருந்தனர் ஒரு குழுவினர். இதற்கு ஸ்ரீ கிருஷ்ண கானம் என்று பெயரிடப்பட்டது. அப்போதெல்லாம் சாமி பாடல்களுக்கும் பாடலாசிரியர்கள்தான் பாடல் வரிகளை எழுதுவார்கள்.
எனவே கிருஷ்ணனுக்கு ஏற்றார் போல எட்டு பாடல் வரிகளை எழுதி தர வேண்டும் என்று கண்ணதாசனிடம் கேட்டனர். அந்த பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைக்க இருந்தார். இந்த நிலையில் இது குறித்து கண்ணதாசனிடம் கேட்டபொழுது எப்போது உங்களுக்கு பாடல் வேண்டும் என்று கேட்டார் கண்ணதாசன்.
எப்போது கொடுத்தாலும் சரிதான் என்று கூறியுள்ளார்கள். அதனை கேட்ட கண்ணதாசன் எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது எட்டு பாடல்களுக்கான தொகையையும் இப்போதே கொடுத்து விட்டால் இப்போதே நான் எட்டு பாடல்களை எழுதி தருகிறேன் என்று கூறி வரிசையாக 8 பாடல் வரிகளை எழுதி கொடுத்தார்.
அந்த எட்டு பாடல்களுமே இப்போது வரை பிரபலமாக உள்ளன. அதில் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, ஆயர்பாடி மாளிகையில் என்கிற பாடல்கள் மிகவும் பிரபலமானதாகும் அந்த அளவிற்கு பாடல் வரிகள் எழுதுவதில் சிறப்பு வாய்ந்தவராக கண்ணதாசன் இருந்திருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்