Connect with us

கராத்தே ஹூசைனின் கடைசி ஆசை.. நிறைவேற்றாத விஜய்..!

Tamil Cinema News

கராத்தே ஹூசைனின் கடைசி ஆசை.. நிறைவேற்றாத விஜய்..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஃபைட் மாஸ்டர் ஆகவும் கராத்தே மாஸ்டராகவும் இருந்தவர் கராத்தே ஹுசைன். கராத்தே ஹுசேன் பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பெரும்பான்மையான மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதற்கு பிறகு அவர் சில சமையல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் நிறைய கராத்தே வீடியோக்களை 90ஸ் காலகட்டங்களிலேயே அவர் வெளியிட்டு இருப்பதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் சமீப காலங்களாக அவர் மிகுந்த உடல்நிலை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்தார். புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கராத்தே ஹுசைன் தன்னுடைய உடல் பாகங்களை தானம் செய்தார்.

தனது இதயத்தை மட்டும் தன்னுடைய கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்கும் படி அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு நடிகர் கராத்தே ஹுசைன் மரணம் அடைந்தார். ஆனால் அவரது மரணத்திற்கு முன்பு அவருக்கு இரண்டு ஆசைகள் இருந்தது.

ஒன்று நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் மற்றொன்று நடிகரும் துணை முதல் அமைச்சருமான பவன் கல்யாணை நேரில் சந்திக்க வேண்டும் என்பதாகும். ஏனெனில் பத்ரி திரைப்படத்தின் தெலுங்கு வர்ஷனில் பவன் கல்யாண் தான் கதாநாயகனாக நடித்தார்.

அந்த திரைப்படத்திலும் அவருக்கு ட்ரெய்னிங் கொடுக்கும் மாஸ்டராக கராத்தே ஹுசைன் தான் நடித்திருந்தார். ஆனால் இவர்கள் இருவருமே இறப்பிற்கும் முன்பு கராத்தே உசேனை வந்து சந்திக்கவில்லை எனவே இது குறித்து சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

To Top