News
பிரகாஷ்ராஜ் புரடிலையே ஒண்ணு கொடுத்தார்! கடுப்பாகி முறைச்ச வில்லன் நடிகர்!..
பிரகாஷ்ராஜ் தமிழில் உள்ள வில்லன் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் சிறப்பாக அவரது வில்லன் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியிருப்பார். அப்படியாக பிரகாஷ்ராஜ் சிறப்பாக வில்லனாக நடித்த திரைப்படம்தான் கில்லி.
கில்லி திரைப்படத்திற்கு பிறகு பிரகாஷ்ராஜின் முத்துப்பாண்டி கதாபாத்திரம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அந்த படத்தில் நடிகர் கராத்தே ராஜா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அந்த படத்தில் ஒரு காட்சியில் கராத்தே ராஜா லைட் ஹவுஸில் இருந்து விஜய் தப்பிவிட்டதாக கூறுவார். உடனே பிரகாஷ் ராஜ் அவர் தலையில் அடித்து அப்புறம் ஏன் நிக்கிற போய் அவனை பிடி என கூறுவார். அந்த காட்சியை படமாக்கும்போது நான் கொஞ்சம் வேகமாக அடிப்பேன் பொறுத்துக்கோ என பிரகாஷ்ராஜ் கராத்தே ராஜாவிடம் கூறியுள்ளார்.
அதே போல காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரகாஷ்ராஜ் அவ்வளவு கடுமையாக அடிப்பார் என்று கராத்தே ராஜாவே எதிர்பார்க்கவில்லை. அப்படி வேகமாக ஒரு அடியை கொடுத்தார் பிரகாஷ்ராஜ். இதனால் கடுப்பான கராத்தே ராஜா உடனே பிரகாஷ் ராஜை முறைத்துள்ளார்.
இந்த விஷயத்தை தனது பேட்டியில் கூறியுள்ளார் கராத்தே ராஜா.
