கமலை விட அதிக கெட்டப்பில் நடிக்கும் கார்த்தி – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் கதாநாயகனாக கார்த்தி இருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திலேயே இவருக்கு மிக முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரம் தரப்பட்டது.

Social Media Bar

வந்தியதேவன் கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் கார்த்தி ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் அடுத்து தீபாவளிக்கு வரும் சர்தார் படமும் கூட இவருக்கு சிறப்பான படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ் மித்ரன் ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய இரும்புத்திரை மற்றும் ஹீரோ இரண்டு திரைப்படங்களுமே வித்தியாசமான கதை களத்தை கொண்டது என்பதால் இந்த படத்திற்கும் மக்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் மொத்தம் 16 கெட்டப்பில் வருகிறாராம் கார்த்தி. ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளவற்றை காட்டிலும் அதிக கெட்டப்பில் கார்த்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு கார்த்தியும் அப்பா மகன் கதாபாத்திரமாக வருவதாக கூறப்படுகிறது.