News
அப்படி சொல்றதால எனக்கு எந்த வித மன வருத்தமும் கிடையாது!.. தனுஷுடன் உறவு குறித்து பேசிய மனைவிக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்!..
தமிழில் வெகு காலங்களாகவே துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் முக்கியமான நடிகர்களில் கார்த்திக் குமாரும் ஒருவர். தமிழில் நிறைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.
அலைபாயுதே, யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல், பசங்க 2, அன்னப்பூரணி, ராக்கட்ரி என பல படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது மனைவி சுச்சித்ரா இவரை விவாகரத்து செய்தது குறித்து பேசியிருந்தார்.
அதில் பேசியிருந்த அவர் கார்த்திக் குமார் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்றும் அவர் நடிகர் தனுஷுடன் தொடர்பில் இருந்தார் என்றும் கூறினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இதற்கு தனுஷ் எந்த ஒரு எதிர் பதிலும் அளிக்காமல் இருந்தார்.

ஆனால் இதற்கு பதிலளித்த கார்த்திக் குமார் கூறும்போது என்னை தன்பாலின ஈர்ப்பாளர் என கூறுவதில் எனக்கு எந்த அவமரியாதையும் கிடையாது. எப்படி ஆண் பெண் என்பது ஒரு பாலினமோ அது போலதான் மற்ற பாலினமும். இதில் வெட்கப்படவோ கேவலப்படவோ எதுவுமே இல்லை என கூறியுள்ளார்.
மேலும் இந்த சமூகத்தில் நீ ஆம்பளையா என்னும் ஒரு கேள்வியின் மூலம் வாழ்நாள் முழுக்க ஆண்களை நோகடிக்கிறார்கள். ஆம்பளைனா இதை செய் என கூறிவிட்டால் அதை செய்வதை தவிர ஒரு ஆணுக்கு வேறு வழி இருக்காது. ஏனெனில் அங்கு அவன் ஆண் என்பதை நிருபித்தாக வேண்டும்.
இப்படி ஆண்களை எதையும் செய்ய வைக்க காலம் தோறும் இந்த வசனங்களை பின்பற்றி வருகின்றனர் என கூறுகிறார் கார்த்திக் குமார்.
