நைட்டு 2 மணிக்கு ஒரு பொண்ணுக்கிட்ட பேசுனேன். அதுவே அப்படியே காதல் திருமணமாயிடுச்சு!.. மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!..

Karthik subburaj : தமிழில் உள்ள வளர்ந்து வரும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.

இவர் ரஜினியை வைத்து இயக்கிய பேட்ட திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ஆரம்ப கால காதல் குறித்து ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

அதில் சுவாரஸ்யமான சில விஷயங்களை கூறியிருந்தார். சத்யா ப்ரேமா என்கிற ஒரு பெண்ணைதான் காதலித்து திருமணம் செய்தார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் அந்த பெண்ணை முதலில் அவருக்கு தெரியவே தெரியாதாம்.

Social Media Bar

சினிமாவில் இயக்குனர் ஆவதற்கு முன்பே பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் கார்த்திக் சுப்புராஜ். அப்பொழுது அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். நாளைய இயக்குனர் மூலம் திரைப்படங்களில் வாய்ப்பு தேடி வந்த போது கூட அவர் பெங்களூரில் இருந்த நண்பர்களுடன் பேசிக் கொண்டுதான் இருந்தார்.

அப்பொழுது அவருடைய நண்பர் மூலம் அறிமுகமானவர்தான் சத்யா ப்ரேமா. சத்யா உனக்கு பொருத்தமான ஒரு பெண்ணாக இருப்பார் என்று கூறிய அவரது நண்பர் ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு சத்யாவிற்கு ஃபோன் செய்து கொடுத்துவிட்டாராம். அப்பொழுது பேசிய பொழுதுதான் எனக்கும் சத்யாவிற்கும் ஒத்து வந்தது. பிறகு அதுவே காதலாக மாறியது என்று கூறியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.