Connect with us

ரஜினி என்ன சொன்னாரு!.. அடிச்சி கேட்டாலும் சொல்ல கூடாதுன்னு சொன்னாரு.. கலாய்த்துவிட்ட கலைஞர்!..

Cinema History

ரஜினி என்ன சொன்னாரு!.. அடிச்சி கேட்டாலும் சொல்ல கூடாதுன்னு சொன்னாரு.. கலாய்த்துவிட்ட கலைஞர்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் முக்கியமான ஆளுமையாக பார்க்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வாய்ப்பு தேடி போராடி நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அதற்கு பிறகு தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்தார் ரஜினிகாந்த்.

1990 களில் ரஜினிக்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்தது. அப்போது கிட்டத்தட்ட எம்.ஜி.ஆருக்கு இருந்தது போன்ற ஒரு ரசிக வட்டாரம் ரஜினிக்கும் இருந்தது என கூறலாம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என அப்போதைய அரசியல் கட்சிகளுக்கே ஒரு பதற்றம் இருந்து வந்தது.

ஆரம்ப காலம் முதலே ரஜினிகாந்த் அதிமுகவிற்கு எதிராக இருந்தார். இதனால் திமுகவிற்கு ஆதரவாக இருந்தார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் ஆதரவால் திமுக ஒருமுறை ஜெயித்ததாக அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு. எனவே ரஜினிகாந்த் கலைஞரை சந்திக்க போனாலே அது பத்திரிக்கையில் தலைப்பு செய்தியாகிவிடும்.

இந்த நிலையில் ஒருமுறை கலைஞரை நேரில் சந்திக்க சென்றுள்ளார் ரஜினி. ரஜினி சென்றப்பிறகு பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலைஞரை சூழ்ந்துக்கொண்டு ரஜினி உங்களிடம் என்ன பேசினார் என கேட்க அதற்கு கலைஞர் கருணாநிதி, ரஜினிகாந்த் என்னிடம் தமிழில் பேசினார். என கூறியுள்ளார்.

உடனே சுதாரித்த பத்திரிக்கையாளர்கள் தமிழில் கலைஞர் என்ன சொன்னார் ஐயா என கேட்டுள்ளனர். அதற்கு கலைஞர் அவர் என்ன பேசினாரோ அதை பத்திர்க்கையாளரிடம் சொல்ல வேண்டாம் என சொன்னார் என்று கூறியுள்ளார்.

எப்போதுமே கலைஞரின் பேச்சுதிறன் பெரிதாக பேசப்படும். அதற்கு நல்ல உதாரணமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

To Top