Movie Reviews
காதலிக்க நேரமில்லை பத்தி சொல்ல ஒண்ணுமில்லை.. அதிருப்தியில் ரசிகர்கள்..!
சமீப காலங்களாகவே நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு என்பதே இல்லாமல் இருந்து வருகிறது. சில வருடங்களாகவே குறிப்பிடும்படி பெரிய வெற்றி படங்கள் எதுவுமே ஜெயம் ரவிக்கு அமையவில்லை.
இந்த நிலையில் அவரது சொந்த வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார் ஜெயம் ரவி. எனவே கண்டிப்பாக வெற்றி படம் கொடுக்க வேண்டிய ஒரு நிலையில் ஜெயம் ரவி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்சமயம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படத்தை கிருத்தியா உதயநிதி இயக்கியிருக்கிறார்.
இந்த படம் ஒரு முக்கோண காதல் கதையை கொண்ட படமாகும். பெரும்பாலும் கிருத்திகா உதயநிதி காதல் படங்களைதான் இயக்கி வருகிறார். அவர் ஏற்கனவே இயக்கிய வணக்கம் சென்னை திரைப்படமும் கூட முக்கோண காதல் கதையை கொண்ட படமாகதான் இருந்தது.
ஆனால் அந்த படம் கொடுத்த வரவேற்பை காதலிக்க நேரமில்லை திரைப்படம் கொடுக்கவில்லை. இந்த படத்தை கிட்டத்தட்ட ஓ காதல் கண்மணி போலவே முயற்சி செய்துள்ளனர். ஆனால் மணிரத்தினத்திற்கு ஒர்க் அவுட் ஆன அளவிற்கு கிருத்திகா உதயநிதிக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை.
பாடல்களை பொருத்தவரை என்னை இழுக்குதடி பாடலை தவிர மற்ற பாடல்களும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் படம் குறித்து ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
