
kavin
தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக கவின் இருந்து வருகிறார். பெரும் நடிகர்கள் அனைவரும் அதிக சம்பளம் வாங்குவதால் தற்சமயம் சின்ன பட்ஜெட் திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிகர்களின் தேவை அதிகமாக இருக்கிறது.
இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மணிகண்டன் கவின் மாதிரியான நடிகர்கள் இப்பொழுது சினிமாவில் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றனர்.
கவின் நடித்த திரைப்படத்தில் டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கவினுக்கு இப்பொழுது நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஸ்டார் திரைப்படத்திற்கு பிறகு அடுத்து கவின் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் பிளடி பெக்கர்.
கவினுக்கு நடந்த சம்பவம்:
இந்த திரைப்படமும் தற்சமயம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆரம்ப காலங்களில் சினிமாவிற்கு வரும்பொழுது நடிகர் கவின் அனுபவித்த விஷயங்கள் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருப்பார்.
அதில் அவர் கூறும் பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா திரைப்படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரே ஒரு காட்சியில் வருவது போலதான் எனக்கு காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
நானும் சரி என்று அங்கு சென்றேன். ஆனால் படப்பிடிப்புக்கான எந்த ஒரு அறிகுறியும் அங்கு தெரியவில்லை. கார்த்திக் சுப்புராஜ் கையில் ஒரு சின்ன கேமராவை மட்டும் வைத்துக்கொண்டு நின்று இருந்தார்.
ஏதோ தேவையில்லாத படத்தில் வந்து சிக்கிக் கொண்டோம் என்றுதான் நான் நினைத்தேன். ஏனெனில் அப்போதைய சமயங்களில் நிறைய திரைப்படங்களுக்கு என்னை அழைத்து இருந்தனர்.. அப்படித்தான் இந்த படமும் ஒன்று என்று நினைத்தேன்.
ஆனால் திரையில் படம் வெளியான பொழுது தான் அந்த படம் எப்படியான படம் என்பதை எனக்கு புரிந்தது என்று கூறியிருக்கிறார் கவின்.