Tamil Cinema News
சைலாண்டாக நடக்க இருக்கும் கீர்த்தி சுரேஷ் திருமணம்.. எந்த தேதியில் தெரியுமா?.
தமிழில் உள்ள முன்னணி நடிகைகளில் முக்கியமானவராக நடிகை கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு தென்னிந்திய அளவிலேயே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
தமிழில் இது என்ன மாயம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானாலும் கூட நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் ரஜினி முருகன்தான் ரஜினி முருகன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து சிவகார்த்திகேயனோடு சேர்ந்து ரெமோ மாதிரியான திரைப்படங்களில் நடித்தார் கீர்த்தி சுரேஷ்.
அதிக பிரபலமடைந்த பிறகு தொடர்ந்து தனுஷ் விஜய் மாதிரியான பெரிய நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்தது. இந்த நிலையில் அவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தது. நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நடிகையர் திலகம் என்கிற திரைப்படம் வெளியானது.
கீர்த்தி சுரேஷ்:
அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கீர்த்தி சுரேஷ் அதன் மூலமாக மிகப் பிரபலம் அடைந்து இருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் குறித்து கிசு கிசுகள் என்பது இருந்து வருகிறது.
முக்கியமாக சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதாக பேசப்பட்டு வந்தன. பிறகு அது பொய்யான தகவல் என்று கீர்த்தி சுரேஷின் குடும்பத்தாரே அதற்கு பதில் அளித்து இருந்தனர். மேலும் கீர்த்தி சுரேஷ் வெகு நாட்களாகவே வேறு ஒரு நபரை காதலித்து வருவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.
கீர்த்தி சுரேஷ் திருமணம்:
சினிமாவை பொறுத்தவரை திருமணம் ஆன பிறகு நடிகைகளுக்கு மார்க்கெட் என்பது குறைய தொடங்கிவிடும். இதனாலேயே நிறைய நடிகைகள் திருமணத்தை ஒத்தி போட்டு கொண்டு வருகின்றனர். அந்த வகையில்தான் கீர்த்தி சுரேஷ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. டிசம்பர் 11ஆம் தேதி இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த திருமணம் மிகவும் சிம்பிளாக இருப்பதாக கூறப்படுகிறது தமிழில் மிக முக்கியமான சில பிரபலங்களுக்கு மட்டுமே இதற்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
