Tamil Cinema News
காசுக்காக வந்த காதல் கிடையாது.. கீர்த்தி சுரேஷின் காதலர் அந்தோணி தட்டில்.. யார் இவர்.!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகை ஆவார். மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வந்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதிகபட்சம் கணேஷ் நடித்த படங்கள் எல்லாம் பிரபலமான நடிகர்களின் படங்களாகதான் இருக்கும். ஆரம்பத்தில் இது என்ன மாயம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி சுரேஷ்:
ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. அதற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் திரைப்படம்தான் கீர்த்தியின் சினிமா வாழ்க்கையை துவங்கி வைத்தது அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் கீர்த்தி சுரேஷ்.
இப்பொழுது ஒரு படி மேலே போய் ஹிந்தி சினிமாவிலும் நடிக்க துவங்கியிருக்கிறார். ஏற்கனவே தென்னிந்தியாவில் தெலுங்கு தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் இவர் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இந்த நிலையில் முப்பது வயதை கடந்த பிறகும் கூட இன்னமும் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
திருமணம்:
இது அதிகமாக பேசப்பட்டு வந்தது. சமீபத்தில் இது குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கீர்த்தி சுரேஷ் அந்தோணி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் 15 வருடமாகவே காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது அந்தோணி தட்டில் ஒரு பெரிய தொழிலதிபர் ஆவார். எனவே காசுக்காக தான் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்கிறாரா? மற்ற நடிகைகளை போல தான் கீர்த்தி சுரேஷும் என்று விமர்சனங்களை அளித்து வந்தனர் நெடிசன்கள்.
ஆனால் கீர்த்தி சுரேஷ் பள்ளி பருவத்தில் இருக்கும் பொழுது அவருக்கும் அந்தோணி தட்டிலுக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிகை ஆனதால் திருமணத்திற்காக இவர் காத்திருந்தார். இந்த நிலையில் இப்பொழுது அவர்களது திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.