தமிழில் பிரபலமான ஒரு சில நடிகைகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கியமானவர். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழில் கதாநாயகி ஆகும் நடிகைகள் மிகவும் குறைவானவர்கள்தான்.
பெரும்பாலும் தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் எல்லாம் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள் நடிகை சமந்தா கீர்த்தி சுரேஷ் மாதிரியான ஒரு சில நடிகைகள்தான் தமிழ்நாட்டிலேயே பிறந்து இங்கு பிரபல நடிகை ஆகியிருக்கின்றனர்.
கீர்த்தி சுரேஷை பொருத்தவரை ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படம் ஆக இருந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு வரவேற்பை பெற்ற கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தொடரி, பைரவா மாதிரியான திரைப்படங்களில் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார்.
கீர்த்தி சுரேஷ்:
அவரது நடிப்பு சரியில்லை என்பது சினிமா விமர்சகர்களின் வாதமாக இருந்தது. இந்த நிலையில் தன்னுடைய நடிப்பை மேம்படுத்தி அடுத்து அவர் நடித்த திரைப்படம் நடிகையர் திலகம். நடிகையர் திலகம் திரைப்படம் மூலமாக எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

தற்சமயம் கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டிகளில் பேசும் பொழுது சீரியல் நடிகர் சஞ்சீவ் குறித்து பேசியிருந்தார். சீரியல் நடிகர் சஞ்சீவும் கீர்த்தி சுரேஷும் வெகு வருடங்களாகவே நட்பில் இருந்து வருகின்றனர். பொதுவாகவே நடிகர் சஞ்சீவிற்கு உடல் எடையை யாராவது குறைத்தார்கள் என்றாலே பிடிக்காதாம்.
விமர்சித்த பிரபலம்:
கீர்த்தி சுரேஷ் சில படங்களில் நடித்த பிறகு அவரது உடல் எடையை குறைத்தார். இதை பார்த்து கோபம் அடைந்த சஞ்சீவ் இதற்காக கீர்த்தி சுரேஷை திட்டினாராம். பிறகு மிக அதிகமாக உடல் எடையை குறைத்துவிட்டோம் என்று நினைத்த கீர்த்தி சுரேஷ் கொஞ்சமாக உடல் எடையை அதிகரித்திருக்கிறார்.
அதன் பிறகு தான் சஞ்சீவ் இவரை திட்டுவதையே நிறுத்தினாராம் இந்த விஷயத்தை கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.







