அர்ஜெண்டினா ரசிகைடா நானு – மாஸ் காட்டிய கீர்த்தி சுரேஷ்!

நேற்று உலக கால்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. பிரான்ஸ்க்கும் அர்ஜெண்டினாவிற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.

Social Media Bar

இரு தரப்பினருமே சமமான அளவில் புள்ளிகளை பெற்று வெகு நேரத்திற்கு போட்டியை கொண்டு சென்று கொண்டிருந்தனர். இறுதியில் அர்ஜெண்டினா ஜெயித்தது.

அர்ஜெண்டினாவின் விளையாட்டு வீரரான மெஸ்ஸி மிகவும் பிரபலமானவர். உலகம் முழுவதும் பலரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். மெஸ்ஸிக்கு இது இறுதி மேட்ச். இதோடு அவர் காலபந்தாட்டை விட்டு செல்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷும் கூட தீவிரமான மெஸ்ஸி ரசிகை ஆவார்.

நேற்று காலபந்தாட்டம் நடந்த நிலையில் டிவியின் முன்பு மெஸ்ஸியின் 10 ஆம் எண் அர்ஜெண்டினா டீ சர்ட்டை போட்டுக்கொண்டு வைப் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.