News
ஹிந்திக்கு போயும் இவ்வளவுதான் சம்பளமா? கீர்த்தி சுரேஷை ஏமாற்றும் பாலிவுட்!..
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்பொழுது பாலிவுட்டிலும் தன்னுடைய காலடியை பதித்துள்ளார். தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கிய கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்தார்.
இந்நிலையில் பாலிவுட் பக்கம் சென்று இருக்கும் கீர்த்தி சுரேஷ் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை பற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். தற்பொழுது பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் 4 சைமா விருதுகள் மற்றும் 2 ஃபிலிம் ஃபேர் விருதுகள் பெற்றிருக்கிறார்.
மேலும் இவர் தயாரிப்பாளர் ஜி சுரேஷ் குமார் மற்றும் மேனகா ஜி ஆகியோரின் மகள் ஆவார். குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய வாழ்க்கை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் மலையாள திரைப்படமான கீதாஞ்சலியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக அவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான சைமா விருதை பெற்றார்.

இதன்பிறகு இது என்ன மாயம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு பல படங்களில் நடித்த அவருக்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்ற படம் என்றால் அது சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன்.
இந்த படத்திற்குப் பிறகு இவர் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார்.
ஹிந்தியில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்
தற்போது இவர் ஹிந்தியில் பேபி ஜான் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழில் வெளியான தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இந்த படத்தை அட்லீ தயாரிக்கிறார். மேலும் கலீஸ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் வருண் தவான், வாமிகா கேபி ஆகியோர் நடித்து வருகிறார்கள். தெறி படத்தில் சமந்தா நடித்திருந்த கதாபாத்திரத்தில் தற்போது ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் 4 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
