News
ரஜினியோடு அதை பண்ணலாம். அஜித்தோடு பண்ண மாட்டேன்… கீர்த்தி சுரேஷ்
தற்போது தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவில் ஆரம்பத்தில் வெற்றி படங்களை கொடுக்கவில்லை என்றாலும் அதன் பிறகு பல படங்களில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் கீர்த்தி சுரேஷ்.
தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தமிழில் வெளியான தெறி படத்தின் ரீமேக்கில் ஹிந்தியில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவர் பாலிவுட் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்தை பற்றி கூறியிருக்கும் ஒரு தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி முருகன், சர்க்கார், பைரவா போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படம் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த படத்தில் இவரின் அற்புதமான நடிப்பு அனைவராலும் பாரட்டு பெற்றது.

சூப்பர் ஸ்டாருடன் அண்ணாத்த திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலம் அடைந்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அஜித்துடன் அப்படி நடிக்க மாட்டேன்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் தங்கையாக அஜித்துடன் நடிப்பீர்களா என கேள்வி கேட்டதற்கு நிச்சயம் நடிக்க மாட்டேன் என கூறினார். அவர் பேசும் போது, ரஜினி சாருடன் அண்ணாத்த திரைப்படத்தில் தங்கையாக நடித்திருக்கிறேன். ஆனால் அஜித்துடன் நடிக்க மாட்டேன்.
அண்ணாத்த படப்பிடிப்பின் போது அவரை தற்செயலாக சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவரை நேரில் சென்று பார்த்து பேசினேன் என பேட்டியில் கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.
