சட்ட விரோதமாக செய்த செயல்.. கண்டுப்பிடித்த அமைச்சர்… சிக்கலில் சிக்கிய கே.ஜி.எஃப் நடிகர்..!
கே.ஜி.எப் திரைப்படம் மூலமாக இந்திய அளவில் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகர் யஷ். கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு பிறகு யஷ் நடிக்கும் படங்களுக்கென்று வரவேற்புகள் அதிகமாக துவங்கின.
அதற்கு முன்பு வரை கன்னட சினிமாவில் மட்டும் நடித்து வந்த யஷ் இப்பொழுது தொடர்ந்து பேன் இந்தியா திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார்.
அடுத்து ஹிந்தியில் உருவாக இருக்கும் ராமாயணம் திரைப்படத்திலும் ராவணன் கதாபாத்திரத்தில் யஷ்தான் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நிறைய திரைப்பட வாய்ப்புகள் யஷ்க்கு வந்தது.
சட்ட விரோத செயல்
அப்படியாக வந்த வாய்ப்புகளில் யஷ் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் டாக்ஸிக். இந்த டாக்ஸிக் திரைப்படம் கண்டிப்பாக பெரிய வசூல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போலவே அந்த படத்தின் பட்ஜெட்டும் பெரிய பட்ஜெட்டாக இருந்து வருகிறது.

ஆனால் தற்சமயம் இந்த படம் குறித்து ஒரு சர்ச்சை கிளம்பி இருக்கிறது ஈஸ்வர் காங்க்ரே என்கிற அமைச்சர் ஒருவர் தற்சமயம் டாக்சிக் படப்பிடிப்பு நடந்த இடம் குறித்து ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நூற்றுக்கும் அதிகமான மரங்களை வெட்டிதான் டாக்சிக் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
இதனை நிரூபிக்கும் வகையில் சேட்டிலைட் மேப் படங்களும் உண்மையை விளக்கி இருக்கின்றன. ஆனால் இது குறித்து பதிலளித்து வரும் பட குழு எல்லாமே சட்ட ரீதியாக நடைபெற்றது தான். சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.