ராமாயணம் படத்துக்கு கே.ஜி.எஃப் ஹீரோ கேட்ட சம்பளம்… ஆடிப்போன இந்திய சினிமா..!

பொதுவாகவே நடிகர்கள் பேன் இந்தியா நடிகர்களாக மாறிவிட்டார்கள் என்றால் பிறகு தொடர்ந்து அவர்களின் சம்பளம் என்பது அதிகரித்துக் கொண்டிருக்கும்.

உதாரணத்திற்கு நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது பெரிதாக சம்பளம் வாங்கவில்லை. ஆனால் தொடர்ந்து பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பேன் இந்தியா திரைப்படங்களாக வந்தன.

இப்பொழுது பிரபாஸின் சம்பளம் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் சம்பளத்தை விட அதிகமாகியுள்ளது. அந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது. அதேபோல கே.ஜி.எப் என்கிற திரைப்படத்தின் மூலமாக இந்திய அளவில் புகழ் பெற்றவர் நடிகர் யஷ்.

கே.ஜி.எஃப் யஷ் கேட்ட சம்பளம்:

கே ஜி எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் இரண்டாவது பாகம் 1500 கோடி தாண்டி பெரிய வெற்றியை கொடுத்தது இதுவரை இந்தியாவில் வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் கொடுத்த படமாக கேஜிஎப் 2 திரைப்படம் தான் இருக்கிறது.

yash
yash
Social Media Bar

அதனை தொடர்ந்து பெரிய பட்ஜெட் திரைப்படங்களாக வந்து கொண்டிருக்கின்றன தொடர்ந்து பாலிவுட்டில் ராமாயணத்தின் கதையை பெரிய பட்ஜெட்டில் திரைப்படமாக இருக்கின்றனர் இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார்.

சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார் ராவணனாக நடிகர் யஷ் நடிக்கிறது. இந்த படம் மொத்தம் மூன்று பாகங்களாக வெளிவர இருக்கிறது இந்த நிலையில் இந்த படத்திற்காக ஒரு பாகத்திற்கு 50 கோடி வீதம் 150 கோடி சம்பளமாக கேட்டிருக்கிறார் நடிகர் யஷ்.

தமிழ் சினிமாவில் 300 கோடி வசூல் கொடுக்கும் நடிகர்களே 50 கோடிக்கு அதிகமாக தான் சம்பளம் வாங்கி வருகின்றனர் அப்படி இருக்கும்பொழுது 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை கொடுத்துவிட்டு இப்பொழுதும் 50 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறாரே என்று குறித்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர் திரை துறையினர்.