News
விஜயகாந்தை தப்பா பேசுனா மரியாதை கெட்டுடும்… வடக்கனை உண்டு இல்லன்னு செய்த குஷ்பு.. யாருக்குமே தெரியாத சீக்ரெட்..!
Khushboo: சினிமாவில் மட்டும் நடிகராக இல்லாமல், நிஜத்திலும் நடிகராக வாழ்ந்து சென்றவர்தான் கேப்டன் விஜயகாந்த். அவர் தன்னைத் தேடி வரும் மனிதர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
நான் சாப்பிடும் உணவு தான் மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவுவை வழங்கி வந்தார் கேப்டன் விஜயகாந்த். அவர் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தனது பயணத்தை தொடங்கினார்.
சினிமாவில் அவரைப் பற்றி மற்ற நடிகர்கள் இவரைப் போன்ற ஒரு மாமனிதரை நாம் எங்கும் காண முடியாது என பலரும் பல நேர்காணலில் கூறி கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் தான் அவருடன் இணைந்து நடித்த நடிகை குஷ்பூ கேப்டன் விஜயகாந்த் பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் மற்றும் நடிகை குஷ்பூ
கேப்டன் விஜயகாந்த் மற்றும் நடிகை குஷ்பூ இணைந்து கருப்பு நிலா, சிம்மாசனம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
கேப்டன் விஜயகாந்த் படப்பிடிப்பில் அனைவரும் சரி சமமாக அமர்ந்து உண்ண வேண்டும். யாரும் பசியுடன் வேலை பார்க்கக் கூடாது என்று ஒவ்வொருவரையும் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வார் என சக நடிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை குஷ்பூ ஒரு நேர்காணல் ஒன்றில் மற்ற குடும்பங்கள், அதாவது அவரை நம்பி இருக்கும் குடும்பங்கள் வாழ வேண்டும் என்றால் அவர் எந்த எல்லைக்கும் செல்வார். ஏன் கீழே கூட அமருவார். அவரை நம்பி இருக்கும் குடும்பங்களுக்காக யார் என்ன சொன்னாலும் அவர் கேட்பார். அந்த அளவுக்கு அவர் ஒரு மாமனிதர் எனக் கூறியிருக்கிறார்.
ஹோட்டல் சம்பவம்
கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த இருந்தபோது, அவரை நம்பி இருந்த 2000 குடும்பங்களுக்காக எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பல நல்ல விஷயங்களை செய்து கொடுத்தார்.
பெப்சி பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளின் போது நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த விஜயகாந்த், மும்பையில் இருந்து பெப்சி சம்பந்தப்பட்ட ஆட்கள் வந்திருந்தார்கள். அவர்கள் சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் தங்கி இருந்தார்கள்.
ஆனால் அவர்களை நேரில் சென்று கேப்டன் விஜயகாந்த் பார்க்க வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் கிடையாது. ஆனாலும் கேப்டன் விஜயகாந்த் ஹோட்டலுக்கு நேரடியாக சென்று அவர்களை சந்தித்தார். நானும் அதில் ஒரு உறுப்பினராக இருந்ததால் அவருடன் நாங்களும் சென்றிருந்தோம்.
அப்பொழுது அவர்கள் அறையில் தங்கியிருந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு சென்ற கேப்டன் விஜயகாந்த்க்கு உட்காருவதற்கு நாற்காலி கூட கொடுக்காமல் தெனாவட்டாக அவர்கள் அமர்ந்து கேப்டனை ஹிந்தியில் கேலி, கிண்டல் செய்தார்கள்.

அதைக் கேட்ட எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. உடனே நான் அவர்களை அடிக்கச் சென்று விட்டேன். என்னை அவ்வாறு செய்யக்கூடாது என தடுத்து கேப்டன் விஜயகாந்த் நிறுத்தினார். அவர்கள் உங்களைப் பற்றி தவறாக பேசுகிறார்கள் என்னால் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்க முடியாது கேப்டன் என கூறினேன்.
ஆனால் அதற்கு விஜயகாந்த் அவர்கள் என்ன சொன்னாலும் நாம் கேட்க வேண்டும். ஏனென்றால், என்னை நம்பி பல குடும்பங்கள் இருக்கின்றன. எனவே நீ இவ்வாறு செய்ய வேண்டாம் என தடுத்து நிறுத்தினார்.
சக நடிகர், நடிகைகளின் குடும்பங்களுக்காக அவர் எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஒரு மாபெரும் மனிதர் தான் விஜயகாந்த் என அந்த நேரலையில் குஷ்பூ உணர்வுபூர்வமாக கூறியிருப்பார்.
