ஜப்பான் காரனோட காட்ஸில்லாவுக்கு இப்படி ரோஸ் கலர் அடிச்சீட்டிங்களேயா!.. காட்ஸில்லா அண்ட் காங் புதிய சாம்ராஜ்யம் ட்ரைலர்!..
Kong and Godzilla: கிங் காங் மற்றும் காட்ஸில்லா இந்த இரண்டு திரைப்படங்களுமே தனித்தனியாக வேறு வேறு தயாரிப்பு நிறுவனங்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும்.
முக்கியமாக காட்சில்லா என்பது ஜப்பானில் பிரபலமாக உள்ள வந்த ஒரு கதாபாத்திரமாகும். ஆனால் அது இரண்டையும் ஒன்று சேர்த்து வார்னர் பிரதர்ஸ் என்னும் ஹாலிவுட் நிறுவனம் தற்சமயம் எடுத்து வரும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பை பெற்று வருகின்றன.
காங் மற்றும் காட்ஸில்லா:
அதன்படி மனிதர்களுக்கு முன்பே இந்த மாதிரியான ஜந்துக்கள் பூமியில் வசித்து வந்ததாகவும் அவர்களுக்கு பிறகுதான் மனிதர்கள் இங்கு உருவானதாகவும் வார்னர் பிரதர்ஸ் எடுத்திருக்கும் இந்த கதையில் கூறப்படுகிறது. அதன்படி கற்பனை உலகமான மத்திய பூமியில் வாழ்ந்து வரும் இந்த மிருகங்கள் சில காரணங்களுக்காக பூமிக்கும் மேலே வருகின்றன என்று கதை இருந்தது.
இதற்காகவே காங் ஸ்கல் ஐலேண்ட் மற்றும் காட்ஸில்லா கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ் என்கிற படங்களை எடுத்தனர். பிறகு காட்ஸில்லா விஷஸ் காங் என்கிற திரைப்படத்தையும் எடுத்தனர். அந்த திரைப்படத்தில் இந்த இரண்டு ஜந்துக்களும் விரோதிகளாக இருந்து வந்தன.

இந்த நிலையில் தற்சமயம் காட்ஸில்லா அண்ட் காங் புதிய சாம்ராஜ்ஜியம் என்கிற இந்த திரைப்படம் இந்த இரண்டு ஜந்துக்களையும் நண்பர்கள் ஆக்கியிருக்கிறது. இதற்கு முன்பு வந்த காட்ஸில்லா விசஸ் காங் திரைப்படத்திலேயே இவைகள் இரண்டும் இணைந்து மெக்கா காட்சில்லா என்னும் ஒரு செயற்கையான ஜந்துவை கொல்வதாக கதை இருக்கும்.
இந்த நிலையில் தற்சமயம் இவை இரண்டும் இணைந்து வேறு ஒரு குரங்கிற்கு எதிராக சண்டை போடுவதாக கதை அமைந்திருப்பது மக்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை அதிகரித்து இருக்கிறது. ஆனால் காட்ஸில்லாவை பொறுத்தவரை அது ஜப்பானில் எடுக்கப்பட்ட பொழுது மிகவும் கொடூரமான ஒரு அமைப்புடன் இருந்தது.
ஆனால் அதை ஹாலிவுட்டில் எடுக்கும் போது நிறைய மாற்றங்களை செய்திருக்கின்றனர் முக்கியமாக காட்ஸில்லாவிடம் இருந்து வெளிப்படும் சக்தியை ரோஸ் கலருக்கு மாற்றி இருப்பது காட்ஸில்லா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது இருந்தாலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.