Tamil Cinema News
இவருக்கா இந்த நிலை.. உடல்நிலை மோசமடைந்த சாமி பட வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்..!
1980 களில் இருந்து தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வந்தவர் நடிகர் போட்டோ ஸ்ரீனிவாச ராவ். 2015 ஆம் ஆண்டு அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
தமிழில் சாமி திருப்பாச்சி மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் தனிப்பட்டு தெரியும் ஒரு கதாபாத்திரமாக இவரது நடிப்பு இருக்கும்.
அந்த அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கோட்டா ஸ்ரீநிவாச ராவ் மிக முக்கியமானவராக இருந்து வந்துள்ளார். வெகு காலங்களாகவே உடல்நிலை தொடர்பான பிரச்சனைகளை இவர் அதிகமாக சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த புகைப்படத்தில் பார்க்கும் பொழுது அவருடைய உடல் மிக மோசமாக மெலிந்திருப்பதை பார்க்க முடிகிறது.
மேலும் ஒரு காலில் கட்டு போட்டு இருக்கிறார் மற்றொரு காலில் விரல்கள் நீக்கப்பட்டு காயங்களுடன் இருக்கிறார் அதனை பார்த்த தெலுங்கு சினிமா ரசிகர்கள் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
