எங்க வீட்டு பிள்ளைக்கு பேய் பிடிச்சிருக்கு… பேய் படமா கொட்டுக்காளி!.. வெளியான ட்ரைலர்!.
தமிழ் சினிமாவில் தற்பொழுது பல காமெடி நடிகர்களும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வேளையில் நடிகர் சூரி கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடித்த விடுதலை பாகம் ஒன்றில் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில், அடுத்தடுத்து கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் சூரி தற்பொழுது கொடுக்காளி படத்தை நடித்து முடித்திருக்கிறார்.
சூரியின் நடிப்பில் கொடுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது கொடிக்காளி படத்தின் டிரெய்லர் எவ்வாறு இருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
கொட்டுக்காளி திரைப்படம்
சூரி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு கதாநாயகியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த படத்தைக் குறித்து பேசிய இயக்குனர் ஆணாதிக்கம், மூடநம்பிக்கைகளை பற்றி இந்த படம் பேசும் என தெரிவித்தார். எனவே இது ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரெய்லர்
இந்நிலையில் கொடுக்காளி படத்தின் டிரெய்லர் சேவலில் இருந்து தொடங்குகிறது. மேலும் டிரெய்லர் முடியும் வரை சேவல் சத்தம் மற்றும் பின்னணி இசையுடனே பயணிக்கிறது. ஒரு இடத்தில் மட்டும் வசனம் இடம்பெறும் வேலையில் அதில் சூரியின் மாறுபட்ட குரலும், மற்றபடி ட்ரெய்லர் முழுவதும் காட்சிகளே பேசுகின்றன. ஒரு வசனம் மட்டும் இடம்பெற்ற இந்த டிரெய்லர் காட்சிகள் பார்ப்பதற்கு விறுவிறுப்பாகவும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது. மேலும் அந்த வசனத்தில் பேய் பிடித்திருக்கிறது என்று கூறப்படுவதால் கொடுக்காளி படம் பேய் படம் ஆக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.