தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை? – எந்த படத்திற்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு நடித்தாலும் ஆண் நட்சத்திரங்கள் வாங்கும் அளவிற்கு பெண் நட்சத்திரங்களால் சம்பளம் வாங்க முடிவதில்லை. எப்போதும் ஆண் நட்சத்திரங்களுக்கே அதிக சம்பளம் கிடைக்கிறது.

திரை துறையில் நயன்தாரா போன்ற நடிகைகள் பெரும் நட்சத்திரங்களாக இருந்தாலும் அவர்கள் ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் அளவிற்கான சம்பளத்தை வாங்கவே முடிவதில்லை.

ஆனால் பழைய காலத்து தமிழ் சினிமாவில் பெண்களும் கூட அதிக சம்பளம் வாங்கியுள்ளனர். அதாவது தமிழில் முதன் முதலாக 1 லட்ச ரூபாயை சம்பளமாக பெற்றவர் ஒரு பெண்தான்.

அந்த பெண் வேறு யாரும் அல்ல நடிகை கே.பி சுந்தராம்பாள்தான், இவர் ஒளவையார் படத்தில் நடித்ததற்காக இந்த சம்பளத்தை பெற்றார். கே.பி சுந்தராம்பாள் ஒளவையார் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதை கண்ட ஜெமினி ஸ்டுடியோ எஸ்.எஸ் வாசன் அவருக்கு 1 லட்ச ரூபாயை சம்பளமாக கொடுத்தார்.

தமிழில் முதன் முதலில் 1 லட்சம் சம்பளமாக வாங்கியவர் சந்திரபாபு என்றொரு பேச்சு திரை வட்டாரத்தில் உண்டு. ஆனால் சந்திரபாபுவுக்கே முன்னரே கே.பி சுந்தரம்பாள் பெற்றுள்ளார்.

கே.பி சுந்தராம்பாள் 1 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும்போது எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இருவரும் படத்திற்கு 30,000 ரூபாயை சம்பளமாக பெற்று வந்தனர்.

Refresh