கண்ணதாசனுக்கு இவ்ளோதான் சம்பளமா? – ஆரம்பக்காலத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

திரைத்துறையில் பெரும் கவிஞர்களில் மிக முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன். திரைத்துறையில் பாடலாசிரியரான இவர் பல பாடல்களுக்கு அர்த்தமுள்ள பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

ஆரம்பக்காலங்களில் கண்ணதாசன் ரொம்ப அதிகமாக எல்லாம் திரைத்துறையில் சம்பாதிக்கவில்லை. மற்ற நட்சத்திரங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த அளவிலான சம்பளமே பெற்று வந்தார்.

அப்போதெல்லாம் அவருக்கு ஒரு பாட்டுக்கு இவ்வளவு என்றுதான் சம்பளம் தருவார்களாம். அப்பொதெல்லாம் கண்ணதாசன் ஒரு பாடலுக்கு 200 ரூபாய் வாங்குவாராம். மொத்த படத்திற்கும் கதை, வசனம் எழுதிக்கொடுத்தால் 3000 ரூபாய் கிடைக்கும்.

அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் 35,000 ரூபாயும், சிவாஜி கணேசன் 30,000 ரூபாயும் சம்பளமாக பெற்று வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல கண்ணதாசன் பிரபலமாக துவங்கினார்.

அவர் பாடலை கேட்கவே ஒரு ரசிக பட்டாளம் உருவானது. அதன் பிறகு பாடலுக்கு இசையமைக்க மட்டும் 25,000 ரூபாய் வரை வாங்கினாராம் கண்ணதாசன்.

Refresh