Connect with us

பப்ளிசிட்டின்னு சொல்லி மனசை நோகடிக்காதீங்க ப்ளீஸ்.. சீட்டு காசையும் செலவு பண்ணிட்டேன்.. மனம் வருந்திய KPY பாலா!.

kpy bala

News

பப்ளிசிட்டின்னு சொல்லி மனசை நோகடிக்காதீங்க ப்ளீஸ்.. சீட்டு காசையும் செலவு பண்ணிட்டேன்.. மனம் வருந்திய KPY பாலா!.

Social Media Bar

KPY Bala : தமிழ்நாட்டில் மக்களுக்கு உதவி வரும் பிரபலங்களில் மிக முக்கியமானவர் கலக்கப்போவது யாரு பாலா, விஜய் டிவி மூலம் பிரபலமான பாலா எப்போதுமே மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே.

இவர் நன்மைகள் செய்து வருவதை கண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் கூட இடையில் ஒரு விழாவில் பாலாவிற்கு ஒரு தொகையை உதவி செய்வதற்காகவே கொடுத்திருந்தார். தன்னிடம் இருக்கும் அனைத்து விஷயங்களையும் மக்களுக்கு உதவுவதற்காக பயன்படுத்தி வருபவர் பாலா.

இந்த நிலையில் தற்சமயம் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் ஏழை மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலருடைய வீடுகளே சென்னையில் மூழ்கி விட்டன இந்த நிலையில் அவர்களுக்கு எல்லாம் உதவும் வகையில் தன்னிடம் இருந்த இரண்டு லட்ச ரூபாயை ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு வழங்கினார் பாலா.

kpy-bala
kpy-bala

இந்த நிலையில் அதை வீடியோவாக வெளியிட்டதால் அதை விளம்பரத்திற்காகத்தான் பாலா செய்கிறார் என்று பலரும் கூற துவங்கி விட்டனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட பாலா கூறும் பொழுது நான் உதவி செய்கிறேன் என்கிற விஷயம் மக்கள் மத்தியில் சேரும்பொழுது உதவி தேவைப்படுபவர்கள் என்னை அணுகுவார்கள் என்பதற்காக தான் அதை நான் வீடியோவாக வெளியிட்டேன்.

அந்த வீடியோ வெளியிட்ட பிறகு பள்ளிக்கரணை பகுதியில் அதிகமான மக்களுக்கு உதவி தேவை என்கிற விஷயம் என்னை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து மூன்று லட்ச ரூபாய் வட்டிக்கு காசு வாங்கி தற்சமயம் அவர்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறேன். எனவே இதை நான் விளம்பரத்திற்காக தான் செய்கிறேன் என்று கூறி எனது மனதை புண்படுத்தாதீர்கள் என்று நெட்டிசன்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் பாலா. தற்சமயம் 150க்கும் அதிகமான குடும்பங்களுக்கு அரிசி, பிரட் மற்றும் அத்தியாசவசிய ஆடைகளை வழங்கியுள்ளார் பாலா.

Articles

parle g
madampatty rangaraj
To Top