KPY Bala : நம்ம பாலாவா இது!.. ஹோட்டலில் வெயிட்டர் வேலை பார்க்கும் KPY பாலா.. ட்ரெண்டாகும் வீடியோ!..

KPY Bala : கடந்த சில நாட்களாக சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில் முக்கிய பிரபலங்கள் பலருமே மக்களுக்கு பெரிதாக உதவி செய்யாத நிலையில் நடிகர் KPY பாலா மக்களுக்கு உதவி செய்ய களம் இறங்கி இருந்தார்.

இதனால் வெகுவாக மக்களால் பாராட்டப்பட்டார் பாலா. ஏனெனில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களே கூட பெரிதாக இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் பொழுது ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் பாலா மனிதநேயத்தோடு இறங்கி மக்களுக்கு இவ்வளவு நன்மைகள் செய்து வருவது எங்கு பார்த்தாலும் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

முதலில் தன்னிடம் இருந்த இரண்டு லட்சத்தை எடுத்து 100 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 என கொடுத்தார் பாலா. அதனை தொடர்ந்து சேர்த்து வைத்திருந்த மீதி 3 லட்சத்தையும் எடுத்து பள்ளிக்கரணை பகுதியில் உள்ள மக்களுக்கு அரிசி வழங்குவது அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது என அதையும் செலவு செய்துவிட்டார்.

Social Media Bar

இந்த நிலையில் அவர் ஒரு உணவகத்தில் வெயிட்டராக பணிபுரியும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரண்டாகி வருகிறது. கடன் வாங்கி பாலா வெள்ள நிவாரணத்திற்கு உதவியதால்தான் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டனர்.

ஆனால் அதன் உண்மை வீடியோ என்னவென்று பார்க்கும் பொழுது  அது ஒரு உணவகத்தின் விளம்பரம்த்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது. பாலாவிற்கு உதவும் என இங்குள்ள கடைகள் நிறுவனங்கள் பாலாவிற்கு வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் பாலா நடித்த ஒரு உணவகத்தின் விளம்பரம் தான் அது என்று கூறப்படுகிறது.