நெல்சன முழுசா நம்ப முடியாது..? வேற ஐடியாவில் ரஜினி? – தலைவர் 169!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான படம் “பீஸ்ட்”.

Thalaivar 169

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் எதிர்பார்ப்பை அவ்வளவாக பூர்த்தி செய்யவில்லை.

படத்தில் வழக்கமான விஜய் படங்களுக்கான அனைத்து அம்சங்களும் இருந்தும் தொய்வான திரைக்கதை, நடிப்பை காட்டாத முகங்கள் என இருந்தது படத்தின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதனால் சன் பிக்சர்ஸ் அடுத்து ரஜினி – நெல்சன் கூட்டணியில் அறிவித்த “தலைவர் 169” படத்தை தொடங்கலாமா என்பது குறித்து தீவிர யோசனையில் ஆழ்ந்ததாக கூறப்படுகிறது.

Thalaivar 169

இதுகுறித்த முடிவை ரஜினியையே எடுக்க சொன்ன நிலையில் அறிவிப்பிலிருந்து பின்வாங்க வேண்டாம் என ரஜினி, நெல்சன் இயக்கட்டும் என கூறியுள்ளாராம்.

ஆனால் நெல்சனின் இயக்கத்தில் இருக்கும் நம்பிக்கை திரைக்கதையில் ரஜினிக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தனது சிநேகிதரும், இயக்குனருமான கே.எஸ்.ரவிக்குமாரை திரைக்கதை அமைக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

ரஜினியை வைத்து முத்து, படையப்பா போன்ற ஹிட் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரஜினியின் மீட்டர் தெரியும் என்பதால் இந்த படத்தில் ரசிகர்கள் கொண்டாடும் காட்சிகள் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Refresh