அட லூசு பயலே.. நான் சொல்றப்படி செய்!.. ரஜினி படத்திலேயே வார்த்தையை விட்ட கே.எஸ் ரவிக்குமார்…
தமிழில் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார். தமிழில் உள்ள பெரிய பிரபலங்களாக இருக்கும் பல நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.
தமிழ் சினிமாவில் அதிக அனுபவம் கொண்ட இயக்குனர்களில் கே எஸ் ரவிக்குமாரும் முக்கியமானவர். கே.எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் தான் இயக்கிய படையப்பா திரைப்படத்தின் அனுபவத்தை பகிர்ந்து இருந்தார்.
படையப்பா படம்:
படையப்பா திரைப்படம் கே.எஸ் ரவிக்குமாரின் திரைப்படங்களில் ஒரு மைல்க்கல் என்று கூறலாம். ஏனெனில் அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அந்த திரைப்படத்தை எடுக்கும்போது மிகப்பெரும் படமாக எடுத்திருந்தார் கே.எஸ் ரவிக்குமார்.

ஆனால் முதலில் அவற்றை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்பதே அவரது திட்டமாக இருந்தது. ஆனாலும் அது கடினம் என்பதால் பிறகு இரண்டு படங்களை சுருக்கி ஒரு படமாக்கி வெளியிட்டார் கே.எஸ் ரவிக்குமார். ஒருவேளை இப்போதைய காலகட்டமாக இருந்தால் அதை இரண்டு பாகங்களாகவே வெளியிட்டு இருப்பார்.
கே.எஸ் ரவிக்குமார் க்ளைமாக்ஸ்:
படையப்பா படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் பாடல் வைப்பது தொடர்பாக உதவி இயக்குனருக்கும் கே.எஸ் ரவிக்குமாருக்கும் சண்டை நடந்துள்ளது. நீலாம்பரி கதாபாத்திரம் இறந்த பிறகு எம்பேரு படையப்பா பாடலை வைக்க வேண்டும் என்று பட குழுவை சேர்ந்த அனைவருமே விரும்பினர்.

ஆனால் கே எஸ் ரவிக்குமாருக்கு அதில் விருப்பமில்லை. அவர் வெற்றி கொடி கட்டு என்னும் பாடலைதான் படத்தில் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே உதவி இயக்குனரிடம் நீ என்ன லூசு பயலாடா? அந்த மாதிரி காட்சியில் எப்படி எம்பேரு படையப்பா பாடலை வைக்க முடியும்.
எப்படி இருந்தாலும் இறந்தது ஒரு பெண் என்பதால் தடைகளை எல்லாம் தாண்டி வந்தார் ரஜினி என்பதாகதான் பாடல் இருக்க வேண்டும் என்று கூறி வெற்றி கொடி கட்டு பாட்டையே கிளைமாக்ஸ் இல் வைத்திருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.