Movie Reviews
மீண்டும் ஒரு பசங்க திரைப்படமா குரங்கு பெடல்!.. படம் எப்படியிருக்கு!.. சுருக்கமான விமர்சனம்!.
சிவகார்த்தியன் வெளியீட்டில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி தற்சமயம் திரையில் வெளியாகி இருக்கும் திரைப்படம் குரங்கு பெடல். தமிழ் சினிமாவில் அவ்வப்போது குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான திரைப்படங்கள் வருவதுண்டு.
அப்படி இந்த வருடம் வந்த திரைப்படம்தான் குரங்கு பெடல். ஒரு சிறுகதையை மையமாக கொண்டு அதை விரிவாக்கி இந்த கதையை அமைத்துள்ளார் படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன்.
படத்தின் கதை:
1980 காலக்கட்டங்களில் இந்த படத்தின் கதை நடப்பதாக கூறப்படுகிறது. படத்தின் கதைப்படி ஒரு கிராமத்தில் காளி வெங்கட் வாழ்ந்து வருகிறார். 40க்கும் அதிகமான வயதான பிறகும் கூட அவருக்கு சைக்கிள் ஓட்ட மட்டும் தெரியவில்லை.

இந்த நிலையில் கிராமமே இதற்காக அவரை கேலி செய்து வருகிறது. இந்த நிலையில் அவரின் கலங்கத்தை துடைப்பதற்காக அவரது மகன் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்கிறான். அப்போதைய காலக்கட்டங்களில் சைக்கிள்தான் பிரதானமான வாகனமாக இருந்தது.
அவ்வளவு சின்ன வயதில் யாரும் சைக்கிள் கற்றுக்கொள்ள முனைப்பு காட்டாதப்போது அந்த சிறுவன் சைக்கிள் கற்றுக்கொள்வதன் ஊடே பல விஷயங்களை பேசுகிறது குரங்கு பெடல் திரைப்படம்.
1980 மற்றும் 90களில் வாழ்ந்தவர்களுக்கு அவர்களது பால்ய வாழ்க்கையை கண் முன் கொண்டு வரும் திரைப்படமாக குரங்கு பெடல் திரைப்படம் உள்ளது.
