Connect with us

கல்குவாரிக்கு என்னையும் ஹீரோயினையும் அழைச்சிட்டு போய்.. இயக்குனர் செயலால் ஆடிப்போன ஸ்ரீ காந்த்.. முதல் படத்தில் நடந்த சம்பவம்.!

srikanth

Tamil Cinema News

கல்குவாரிக்கு என்னையும் ஹீரோயினையும் அழைச்சிட்டு போய்.. இயக்குனர் செயலால் ஆடிப்போன ஸ்ரீ காந்த்.. முதல் படத்தில் நடந்த சம்பவம்.!

Social Media Bar

Actor Srikanth is one of the few actors who have been popular among the masses for a period of time. Srikanth came to Tamil cinema as Chocolate Boy. Everyone expected that he would continue to give many hits

ஒரு காலகட்டத்தில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக இருந்த ஒரு சில நடிகர்களில் நடிகர் ஸ்ரீகாந்தும் ஒருவர். சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவிற்கு வந்தார் ஸ்ரீ காந்த். இவர் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் காதல் நாயகனாக அவருக்கு பெரும்பாலும் படங்கள் வெற்றியை கொடுத்தன. ஆனால் ஆக்ஷன் நடிகராக அவர் மாறிய பொழுது அவருக்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. அதற்கு பிறகும் கூட கதை தேர்ந்தெடுப்பதில் இவர் பெரிதாக முயற்சி செய்யாமல் இருந்ததார்.

நடிகர் ஸ்ரீ காந்த்:

அவருக்கென்று இப்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பேட்டிகளில் பேசும் பொழுது பழைய சினிமா அனுபவங்கள் குறித்து நிறைய பகிர்ந்திருக்கிறார் ஸ்ரீகாந்த். அதில் அவர் கூறும் பொழுது கனா கண்டேன் என்கிற திரைப்படத்தில் நடித்தபோது நடந்த அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்.

கனா கண்டேன் திரைப்படம் இயக்குனர் கே.வி ஆனந்தின் முதல் திரைப்படம் அந்த திரைப்படத்தை இயக்கும்பொழுது கே.வி ஆனந்த் ஒரு முக்கிய குறிக்கோளுடன் இருந்தார். படத்தில் உள்ள அனைத்து காட்சிகளுமே சென்னையில்தான் இடம் பெற வேண்டும்.

சென்னையில் நடந்த சம்பவம்:

சென்னையை விட்டு வெளியே போகக்கூடாது ஆனால் வெளியே போனது போன்ற பிரமையை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் டூயட் பாடல்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்லலாம் என்று ஸ்ரீகாந்த் ஆசையாக இருந்திருக்கிறார்.

அவரிடம் சென்று ஒரு கல்குவாரியில் வைத்துதான் பாடலை எடுக்க போகிறோம் என்று கே.வி ஆனந்த் கூறியிருக்கிறார். அதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் ஸ்ரீ காந்த். கல்குவாரிய நாள் மிகவும் வெயிலாக இருக்கும் எப்படி சார் அங்கு சென்று பாடலை எடுப்பது என்று கேட்டிருக்கிறார்.

அதையும் அழகாக காட்ட முடியும் என்று கூறி அந்த பாடலை எடுத்து இருக்கிறார் கே.வி ஆனந்த் அதே மாதிரி அந்த பாடல் வொர்க் அவுட் ஆகி இருந்தது என்று இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார் ஸ்ரீகாந்த்.

To Top