Connect with us

டான்ஸ் ஆட வந்தவங்க அநியாய சம்பளம் கேட்டாங்க… லியோ சம்பள பிரச்சனை குறித்து விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!..

leo lokesh kanagaraj

News

டான்ஸ் ஆட வந்தவங்க அநியாய சம்பளம் கேட்டாங்க… லியோ சம்பள பிரச்சனை குறித்து விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!..

Social Media Bar

விஜய் இதுவரை நடித்த திரைப்படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் லியோ திரைப்படமாகும். அதற்கு ஏற்றார் போல அந்த திரைப்படமும் வசூலை குவித்து வருகிறது. முதல் நாளே கிட்டத்தட்ட 140 கோடிக்கும் அதிகமாக ஓடி பெரும் வசூலை கொடுத்துள்ளது லியோ.

இந்த படத்தில் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட பாடல் நான் ரெடி தான் வரவா என்கிற பாடல். இந்த பாடலுக்காக கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆட்களை நடனம் ஆடுவதற்கு வேலைக்கு அமர்த்தியிருந்தனர். இந்த நடிகர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களுக்கு சரியான சம்பளம் வரவில்லை என்று கூறி இடையில் பிரச்சனை செய்தனர்.

இதனை அடுத்து சினிமா தொழிலாளர்கள் சங்கத்திலிருந்து ஒரு நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அதன்படி அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. எனவே இது குறித்து தற்சமயம் படத்தின் தயாரிப்பாளர் லலித்திடம் கேட்டபொழுது அவர் அதில் உள்ள முக்கியமான விஷயத்தை கூறிருந்தார்.

அதாவது சம்பளம் இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நபர்களுக்கு ஒரு சம்பளமும் தொழிலாளர்கள் சங்கத்தில் இல்லாத வெளி ஆட்களுக்கு வேறு சம்பளமும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர் சங்கத்தில் இல்லாத நடன கலைஞர்களுக்கு ஒரு நாளைக்கு 1750 ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தொழிலாளர்கள் சங்கத்தில் உள்ளவர்களுக்கு அதை விட அதிக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தையுமே தொழிலாளர்கள் சங்கம்தான் நிர்ணயத்ததே தவிர தயாரிப்பாளர் நிர்ணயிக்கவில்லை இந்த நிலையில் அவர்களுக்கான சம்பளத்தை கொடுத்து முடித்தாகிவிட்டது.

ஆனால் அவர்கள் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்களோ அந்த அளவு சம்பளத்தை எதிர்பார்த்தனர் இதுதான் பிரச்சனைக்கான காரணம் என்று விளக்கியுள்ளார் தயாரிப்பாளர் லலித்.

To Top