Tamil Cinema News
லியோ ஆடியோ லாஞ்ச் Confirm.. ஆனா தமிழ்நாட்டுல இல்ல! எங்கே தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. விஜய் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. காரணம் முந்தைய படங்களில் லோகேஷ் கனகராஜ் செய்த சிறப்பான சம்பவங்கள்தான்.
அடுத்த மாதம் அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் சிங்கிள் பாடல், சில போஸ்டர்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் அல்லது டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் செப்டம்பர் 30ம் தேதி சென்னையில் லியோ ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.
இதற்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடங்கி நடந்து வந்த நிலையில் திடீரென ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சிக்கல்களால் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் ஆடியோ வெளியீட்டு விழா நடத்தாமல் படத்தை வெளியிடுவது குறித்து விஜய் தரப்பிலும் அதிருப்தி நிலவுவதாக தெரிகிறது. ரசிகர்களுக்கும் இது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதனால் ஆடியோ வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டில் நடத்தாமல் வேறு மாநிலங்களில் நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
லியோ படத்தின் டிஸ்ட்ரிபூட்டர்களில் ஒருவரான கோபுரம் ப்லிம்ஸ் கோபாலன் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை கொச்சியில் நடத்தலாம் என தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி வருவதாக தகவல் கசிந்துள்ளது. தற்போதைக்கு ரசிகர்கள் ஏமாற்றத்தை போக்க ஆடியோ வெளியீடு நடப்பதாக அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 30ல் லியோ படத்தின் சிறிய டீசர் ஒன்றை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
