லண்டனில் ஏ சர்டிஃபிகேட் வாங்கிய லியோ!.. பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?.

தமிழ் சினிமாவில் ஏ சான்றிதழ் என்பது ஒரு அபசகுணமான விஷயமாக பார்க்கப்படுவது வழக்கமாகும். ஏனெனில் எந்த ஒரு திரைப்படம் ஏ சான்றிதழ் வாங்குகிறதோ அது பெரிதாக வெற்றியடையாது என்று நடிகர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு.

உதாரணத்திற்கு பில்லா படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தபோது அதற்கு ஏ சான்றிதழ்தான் வழங்கப்பட்டது. அந்த படம் பெரிய வெற்றியை அடையவே இல்லை. அதேபோல சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அதுவும் பெரிய வெற்றியை அடையவில்லை.

இப்படி ஏ சான்றிதழ் பெற்றாலே அந்த படம் வரலாறு ரீதியாக தோல்வியை தான் கண்டுள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்படம் இந்தியாவில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. ஆனால் அதே சமயம் லண்டனில் இந்த திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இதை பலரும் விமர்சித்து வருகின்றனர் லோகேஷ் கனகராஜ் அதிகமான இரத்த காட்சிகளை வைத்திருப்பதே இதற்கு காரணம் என்றும் பேச்சுக்கள் உள்ளன. ஆனால் லண்டனை பொருத்தவரை அங்கு சான்றிதழ் ரீதியான விஷயங்களில் மாறுபாடுகள் இருக்கின்றன.

இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதை தான் ஏ என்கிற சான்றிதழ் மூலமாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் லண்டனில் பொருத்தவரை ஏ என்பது ஐந்து வயதிற்கும் கீழ்பட்ட குழந்தைகள் பார்க்கக் கூடாது என்ற பொருளில் தான் வழங்கப்படுகிறது. மேலும் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோரின் அனுமதியுடன் அந்த படத்தை பார்க்கலாம்.

அதிலேயே டபுள் எ என்கிற சான்றிதழ் இருக்கிறது அந்த சான்றிதழ் பெற்ற படங்களை 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் அறவே பார்க்க கூடாது. அதற்கு பிறகு x என்கிற சான்றிதழ் உள்ளது .அந்த சான்றிதழ் பெற்ற படங்களை 18 வயதிற்கு கீழ் உள்ள யாரும் பார்க்க கூடாது இப்படி இருக்கும் பொழுது இந்தியாவில் உள்ள ஏ சான்றிதலுடன் இதை ஒப்பிட்டு பலரும் பேசி வருவது சரி கிடையாது என்று திரை வல்லுநர்கள் கூறுகின்றனர்.