News
Thalapathy vijay : லியோவில் இந்த விஷயத்தை யாரும் கவனிக்கலை… இரண்டாம் பாகத்துக்கு இதுதான் கனெக்ட் ஆக போகுது!..
Leo 2 Movie : லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் என்றாலே அதற்கு தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டாக்கி உள்ளது. அந்த வகையில் இறுதியாக விஜய் நடித்த லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த வருடம் அதிக வெற்றி கொடுத்த படங்களின் வரிசையில் லியோ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது என்று கூறலாம். லியோ திரைப்படத்தில் படம் ஆரம்பித்தது முதல் பார்த்திபன் என்கிற கதாபாத்திரம்தான் லியோ நிறைய காட்சிகளை லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பார். இது குறித்து பிரபலமான விமர்சகர்கள் கூறும் பொழுது பார்த்திபன் என்பது வெளியில் நடிப்புக்காக அவர் போட்டிருக்கும் வேடம் தான்.

உண்மையில் லியோ என்னும் மிருகம் அவருக்குள் தூங்கிக் கொண்டிருக்கும். மார்க்கெட் ஒன்றில் மனைவியுடன் சென்றிருக்கும் பொழுது ஒரு ரவுடி குழு பார்த்திபனை அடிக்க வரும். அப்பொழுது ஒரு சாதாரண மனிதனாக பார்த்திபன் இருந்திருந்தால் அவர்களிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டு சென்றிருப்பார்.
ஆனால் உள்ளிருக்கும் லியோ வெளிவந்ததால் அந்த காட்சியில் பார்த்திபன் தப்பித்துப் போக நினைக்கும் ஒருவனை கூட துரத்தி சென்று கொலை செய்ய நினைப்பார். அதேபோல ஒரு காட்சியில் போலீசின் கழுத்தை பிடித்து நெறிப்பார். அத்தனை போலீஸ் முயற்சித்தும் அவரது கையை எடுக்க முடியாது.

அந்த காட்சியிலும் அவருக்குள் இருக்கும் லியோ வெளி வருவதை பார்க்க முடியும். எனவே இந்த படத்தில் லோகேஷ் சொல்ல வரும் முக்கியமான விஷயம் என்னவென்றால் பார்த்திபன் என்கிற கதாபாத்திரத்தில் வாழும்போதும் அந்த லியோ என்கிற கதாபாத்திரம் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.
லியோ கொஞ்சமாக வெளிவந்ததைதான் லியோவின் முதல் பாகத்தில் பார்த்தோம். ஆனால் அடுத்து வரும் பாகத்தில் பார்த்திபன் முழுவதுமாக நீங்கி முழு லியோவை பார்ப்போம். அது இன்னும் பயங்கரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
