News
விக்ரம்ல சொதப்பினதை லியோவில் சரி பண்ணியிருக்கேன்!.. தவறை திருத்திக்கொண்ட லோகேஷ்!..
மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வந்த லியோ திரைப்படம் இன்னும் எட்டு நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டுள்ளனர் தளபதி ரசிகர்கள்.
இந்த திரைப்படம் எப்படியும் வாரிசு திரைப்படத்தின் வசூலை விட அதிக வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு விலங்கை முன்னிலைப்படுத்தி இருப்பார் லோகேஷ் கனகராஜ்.
தேபோல லியோ திரைப்படத்தில் கழுதைப்புலியை முன்னிலைப்படுத்தி இருந்தா.ர் அந்த கழுதை புலியை கிராபிக்ஸில்தான் உருவாக்கியிருந்தனர் இருந்தாலும் கிராபிக்ஸ் வேலைகள் மிகவும் சிறப்பாகவே இருந்தன. இது குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்கும் பொழுது படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்திற்கான கிராபிக்ஸ் வேலையை நான் தொடங்கி விட்டேன்.
போன வருடம் அக்டோபர் மாதமே ஒரு பெரிய நிறுவனத்திடம் கிராபிக்ஸ் வேலையை கொடுத்துவிட்டேன். ஏனெனில் விக்ரம் திரைப்படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் சிறப்பாக இல்லை என்று அது அதிக விமர்சனத்திற்கு உள்ளானது.
திரும்ப அந்த தவறை செய்துவிடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்புக்கு எடுத்துக் கொண்ட நாட்களை விடவும் கிராபிக்ஸ் வேலைக்கு அதிக நாட்கள் எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
