News
விஜய்ணா அப்பவே அது பிரச்சனைனு சொன்னார்!.. நாந்தான் வற்புறுத்தி செய்ய வச்சேன்.. உண்மையை பகிர்ந்த லோகேஷ்!.
Leo vijay: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதால் தற்சமயம் ரஜினிகாந்தை விடவும் விஜய்தான் அதிக சம்பளம் வாங்குகிறார் என்றும் பேச்சுக்கள் உள்ளன.
இந்த நிலையில் தற்சமயம் விஜய் நடித்து திரையில் வெளியாகவிருக்கும் திரைப்படம் லியோ. இந்த படத்திற்கு ஏற்கனவே ஆறு நாட்களுக்கு முக்கால்வாசி திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளது. அதற்கு லோகேஷ் கனகராஜும் முக்கிய காரணமாகும்.
இந்த நிலையில் வெளியான லியோ திரைப்படத்தின் ட்ரைலர் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அந்த படத்தில் விஜய் பயன்படுத்திய கெட்ட வார்த்தை அதிக விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் இதுக்குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது படப்பிடிப்பில் அந்த வசனத்தை எடுக்கும்போதே இதில் ஏதும் தப்பில்லையே என விஜய் கேட்டார்.
பொதுவாக என்னிடம் எந்த காட்சிகள் குறித்தும் விஜய் கேள்வி கேட்க மாட்டார். ஆனால் இந்த படத்தில் கேட்டார். எனவே அவரிடம் அந்த கதாபாத்திரம் அந்த சூழ்நிலையில் பேசும்போது அது தவறாக தெரியாது என கூறினேன். இருந்தாலும் ஒன்றுக்கு மூன்று முறை விஜய் என்னிடம் கேட்டார் என கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
அப்போதே அந்த வார்த்தையை லோகேஷ் கனகராஜ் எடுக்காமல் இருந்திருந்தால் இப்போது இவ்வளவு பெரிய சர்ச்சைகள் உருவாகி இருக்காது.
