பாலிவுட்டில் உருவாகும் எல்.சி.யு.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு நட்சத்திர இயக்குனராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்த பிறகும் லோகேஷ் கனகராஜ் இன்னும் பாலிவுட் திரைப்படங்களை இயக்காமல் இருக்கிறார்.

பெரிதாக வளரும் இயக்குனர்களுக்கு எப்பொழுதுமே பாலிவுட்டில் வாய்ப்புகள் வருவது உண்டு. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ்க்கு அப்படியான வாய்ப்புகள் வந்ததா? என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த லோக்கி  மாநகரம் திரைப்படத்திற்கு பிறகே எனக்கு வாய்ப்புகள் வந்தது ஆனால் அந்த படத்தை திரும்ப எடுக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

அதேபோல கைதி திரைப்படத்திற்கும் மாஸ்டர் திரைப்படத்திற்கும் கூட எனக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால் செய்த வேலையை திரும்ப செய்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும் என்று நான் நினைத்தேன்.

Social Media Bar

அதனால் ஹிந்தியில் படம் பண்ணாமலே இருந்தேன். தற்சமயம் கூலி திரைப்படத்திற்காக அமீர்கானிடம் சந்தித்து பேசிய பொழுது அவருடைய நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. அமீர் கானுக்கும் என்னுடைய வேலை பிடித்திருந்தது.

கூலி திரைப்படத்தில் நானும் அவரை காட்டியிருந்த விதம் அவருக்கே புதிதாக இருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கென்று ஒரு படம் எடுக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். எனவே பாலிவுட்டில் அமீர்கானை வைத்து ஒரு படம் இயக்கலாம் என்று இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

பெரும்பாலும் கூலி திரைப்படத்தில் வரும் அமீர்கானின் கதாபாத்திரத்தை விரிவுபடுத்தி அந்த கதை உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.