News
கைதி 2வுக்கு முன்னாடி என்னை வச்சி ஒரு படம் இருக்கு… சீக்ரெட்டை உடைத்த நரேன்!..
Lokesh Kanagaraj Cinematic Universe : ஹாலிவுட் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போல தமிழ்நாட்டில் லோகேஷ் கனகராஜின் சினிமா பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படங்கள் அனைத்துக்குமே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்துதான் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்கிற ஒரு புது விஷயத்தை கொண்டு வந்தார். இதன் மூலமாக அவர் இயக்கும் பல திரைப்படங்களை ஒன்றிணைத்து ஒரே திரைப்படமாக கொண்டு வர இருக்கிறார்.

இந்த நிலையில் எல் சி யு வில் அடுத்து வர இருக்கும் திரைப்படம் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் விக்ரம் படத்திற்கான பல விஷயங்கள் இருக்க போவதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன ஆனால் ராகவா லாரன்ஸ் தலைவர் 171 இல் நடிக்க இருப்பதால் இதில் நடிப்பாரா என்பது சந்தேகமாகவே இருந்து வருகிறது.
இதற்கு நடுவே லோகேஷ் கனகராஜ் யுனிவர்சில் இன்னும் சில புது விஷயங்களை சேர்த்து இருக்கிறாராம் லோகேஷ். அதை திரைப்படம் வாயிலாக சொல்ல முடியாது என்பதால் அதற்கு என்று தனி ஒரு குறும்படம் அல்லது சீரிஸ் எடுப்பதற்கு முடிவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இதில் நரேனுக்கு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது எனவே இது விக்ரமிற்கு முந்தைய கதையாகவோ அல்லது விக்ரமிற்குக் அடுத்த நடக்கும் கதையாகவோ இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது இந்த விஷயத்தை நரேன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
