லியோவை விட பவரா இருக்கும் ரோலக்ஸ்!.. ஓப்பனாக கூறிய லோகேஷ் கனகராஜ்!..

தமிழில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தனது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறக்கூடியதாக இருந்தன. மாநகரம் திரைப்படத்திலேயே பல கதைகளை ஒன்றிணைத்து ஒரு திரைப்படம் ஆக்கி இருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதனை அடுத்து வந்த மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்களும் பெரும் வெற்றியை கொடுத்தது. தற்சமயம் லியோ திரைப்படமும் எதிர்பார்த்ததை விட நல்ல வெற்றியை கொடுத்துள்ளது.

Social Media Bar

இதனை தொடர்ந்து விக்ரம் திரைப்படம் எடுக்கும்பொழுது லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் என்கிற ஒரு விஷயத்தை துவக்கி வைத்தார் லோகேஷ். அதன்படி விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு அதோடு தொடர்புடைய சில படங்களை எடுக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி அவர் எடுக்க இருக்கும் திரைப்படம் ரோலக்ஸ், இந்த திரைப்படத்தை பொருத்தவரை சூர்யாவின் முந்தைய கதையை குறிப்பிடும் விதத்தில் ரோலக்ஸ் திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் சூர்யா வரும் காட்சி ரோலக்ஸ் திரைப்படத்திலும் வரும். அதோடு ரோலக்ஸ் திரைப்படம் முடியும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ரோலக்ஸ் திரைப்படம் லியோவை விட அதிக ரத்த காட்சிகளுடன் இருக்கும்.

முக்கியமாக லியோ விஜய் கதாபாத்திரத்தை விட ரோலக்ஸ் இல் சூர்யா கதாபாத்திரம் இன்னும் கொடூரமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஏனெனில் ரோலக்ஸ்தான் கமல்ஹாசனுக்கு பெரும் வில்லன் என்பதால் லியோ விஜய்யை விடவும் மோசமான ஒரு நபராக சூர்யா காட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.