Lokesh Kanagaraj: நிஜ வாழ்க்கையில் நடந்த கடத்தல்!.. கையில் ராடுடன் கிளம்பிய லோகேஷ் கனகராஜ்!. பெரும் சம்பவம் போல!..

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு இயக்குனரும் தமிழ் சினிமாவில் 5 திரைப்படங்களிலேயே இப்படி ஒரு உயரத்தை தொட்டிருக்க முடியாது.

முதலில் இயக்கிய மாநகரம் திரைப்படம் மட்டுமே புதிய நாயகர்களை வைத்து எடுத்த படமாகும். அதற்குப் பிறகு இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் லியோ என அனைத்தும் பெரிய ஹீரோக்களை வைத்து எடுத்த திரைப்படங்கள்தான்.

அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜும் இயக்குனர் உறியடி விஜயகுமாரும் ஆரம்ப காலகட்டம் முதலே நண்பர்களாக இருந்திருக்கின்றனர்.

lokesh kanagaraj
lokesh kanagaraj
Social Media Bar

சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் பொழுது இருவருக்கும் இடையே பழக்கம் இருந்திருக்கிறது. இந்த நிலையில் பெரிதாக வளர்ந்து விட்ட காரணத்தினால் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய நண்பனுக்கு வாய்ப்பளித்து அவரை வைத்து படம் தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது இருவரும் நண்பர்களாக இருந்த காலகட்டத்தில் ஒரு முறை பூனைகளை கொன்று ஒரு வண்டியில் ஏற்றுக் கொண்டு அந்த வண்டி சென்று கொண்டிருந்தது.

அந்த வண்டி எதற்காக இங்கு செல்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை ஆனால் உணவகங்களில் கோழிக்கறிக்கும் பதிலாக இந்த பூனைகளின் கறி விற்கப்படுகிறதோ என்கிற சந்தேகம் மட்டும் இருந்தது. எனவே ஆயுதங்களை கையில் எடுத்துக் கொண்டு அந்த வண்டியை பின்பற்றி சென்றோம் என்று அப்போது செய்த சாகசங்களை கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

அந்த வண்டியை பிடித்தாரா இல்லையா என்பதை மட்டும் அவர் கூறவில்லை இருந்தாலும் அப்படி எல்லாம் இருந்த வாழ்க்கையை இப்பொழுது மிகவும் இழந்திருக்கிறோம் என்று கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.