Connect with us

இதுதான் ரிலேஷன்ஷிப் சுருதிஹாசனும் லோகேஷுமா!.. கதாநாயகனாக களம் இறங்குகிறாரா லோகேஷ்!..

lokesh kanagaraj shuruthihaasan

News

இதுதான் ரிலேஷன்ஷிப் சுருதிஹாசனும் லோகேஷுமா!.. கதாநாயகனாக களம் இறங்குகிறாரா லோகேஷ்!..

Social Media Bar

Lokesh Kanagaraj: லியோ திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் பெற்று வருகிறார் லோகேஷ் கனகராஜ். லியோ திரைப்படத்திற்கு பிறகு அடுத்து ரஜினிகாந்தின் நடிப்பில் திரைப்படம் ஒன்றை இயக்கத் இருக்கிறார்.

அதற்கு பிறகு கைதி 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதற்கு பிறகு சூர்யா நடிக்கும் ரோலக்ஸ் திரைப்படம் உருவாக இருக்கிறது. அதற்கு பிறகு நான் விக்ரம் திரைப்படத்தின் இறுதி பாகம் எடுக்கப்பட இருக்கிறது. இதற்குப் பிறகு லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருந்தார்.

lokesh-kanagaraj
lokesh-kanagaraj

ஆனால் விஜய்யின் அரசியல் வருகையின் காரணமாக லியோ 2 திரைப்படம் வருவதற்கு வாய்ப்பில்லை என தெரிந்து விட்டது. இந்த நிலையில் தொடர்ந்து இவர் இயக்கிய திரைப்படங்களை நடிகர் கமல்ஹாசன்தான் தயாரிக்க இருக்கிறார்.

இதற்கு நடுவே தற்சமயம் லோகேஷ் கனகராஜ் நடிகை சுருதி ஹாசனுடன் சேர்ந்து நிற்பது போன்ற போஸ்டர் ஒன்றை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இது என்ன திடீர் பிரச்சனை என்று பார்க்கும் பொழுது சுருதிஹாசன் ஒரு ஆல்பம் பாடலை பாட இருப்பதாகவும் அதை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும் பேச்சுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்க சுருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் இந்த போஸ்டர் குறித்து எந்த ஒரு தகவலையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.

To Top