ரஜினி சார் ஹீரோ.. கமல்தான் வில்லன்.. லோகேஷ் சொன்ன விஷயம்.. இந்த ஐடியா வேற இருக்கா?.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய நடிகர்களை வைத்து வெற்றி திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஒவ்வொரு முறையும் லோகேஷ் கனகராஜ் மீதான எதிர்பார்ப்பு என்பது மக்களுக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

லோகேஷ் கனகராஜும் அதை பூர்த்தி செய்யும் வகையில் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் குறைந்தபட்சம் 400 கோடி வசூல் சாதனை படைக்கும் என்கிற நிலை இருந்து வருகிறது.

அதில் யார் ஹீரோவாக நடித்தாலும் லோகேஷ் கனகராஜுக்காகவே அந்த திரைப்படம் ஓடும் நிலை இருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ஒரு கல்லூரிக்கு விழாவிற்கு சென்றிருந்த பொழுது ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படம் சிறப்பான ஒரு திரைக்கதை மாஸ் திரைப்படம் அப்படியான ஒரு திரைப்படத்திற்கு நீங்கள் கதை எழுதி வைத்திருக்கிறீர்கள்.

kamal rajini
kamal rajini
Social Media Bar

கமல் ரஜினி படம்:

இப்பொழுது அதில் ஹீரோவாக யாரை நடிக்க வைப்பீர்கள் வில்லனாக யாரை நடிக்க வைப்பீர்கள் ஏனெனில் பட கதைப்படி ஹீரோ வில்லன் இருவருமே ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்று கேட்டிருந்தார் ஒரு கல்லூரி மாணவர்.

அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக ரஜினியை நடிக்க வைப்பேன் வில்லனாக கமல்ஹாசனை நடிக்க வைப்பேன் என்று கூறியிருந்தார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

அதேபோல தற்சமயம் ரஜினியை வைத்து கூலி என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். எனவே அவர்கள் இருவரையும் இணைத்து ஒருவேளை இவர் படம் பண்ணினாலும் பண்ணலாம் என்று இது குறித்து பேசி வருகின்றனர் ரசிகர்கள்.