Tamil Cinema News
விஜய்யும் அவர் அப்பாவும் கட்டம் கட்டி தேடுனாங்க… மறைந்து இருந்த இயக்குனர்..!
ஒரு காலக்கட்டத்தில் விஜய் டிவியில் அதிக பிரபலமாக இருந்த நிகழ்ச்சி லொள்ளு சபா. அந்த நிகழ்ச்சியின் மூலமாக பல பிரபலங்கள் பிறகு சினிமாவில் வாய்ப்பை பெற்று நடித்தனர். நடிகர் சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாகதான் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் போக்கிரி திரைப்படத்தை பேக்கிரி என்கிற பெயரில் அதனை கேலி செய்து லொள்ளு சபா நிகழ்ச்சி நடத்தினர். அது மிகப்பெரிய பிரச்சனையானது. இந்த நிலையில் அந்த சம்பவம் குறித்து லொள்ளு சபா நிகழ்ச்சியின் இயக்குனர் சமீபத்தில் பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும்போது பொதுவாக திரைப்படங்களை காமெடியாக இப்படி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் எனதான் எடுப்போம். ஆனால் போக்கிரியை மட்டும் திரையரங்கில் ரசிகர்களே கலாய்ப்பது போல எடுத்துவிட்டோம்.
அது அப்போது அதிக பிரச்சனையாகிவிட்டது. அப்போது விஜய் டிவியில் இருந்து எனக்கு போன் வந்தது. ஏன் அலுவலகத்திற்கு வரவில்லை என கேட்டார்கள். ஏன் என்னாச்சு என நான் கேட்டேன். இந்த மாதிரி பிரச்சனையாகி விட்டது. விஜய் சாரும் எஸ்.ஏ சந்திரசேகரும் உன்னை தேடி கொண்டுள்ளனர் என கூறியுள்ளனர்.
இந்த விஷயத்தை பகிர்ந்த இயக்குனர் எங்கள் மீதும் தப்பு இருந்தது. ஆனால் விஜய்க்கு லொள்ளு சபா மிகவும் பிடிக்கும். இந்த எபிசோடில் மட்டும் நாங்கள் கொஞ்சம் ஓவராக செய்துவிட்டோம் என கூறியுள்ளார் இயக்குனர் ராம் பாலா.
