எந்த அறிமுக நாயகனும் இவ்ளோ வசூல் பண்ணுனது இல்ல? – அஜித்,விஜய்க்கே டஃப் கொடுக்கும் லவ் டுடே.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் லவ் டுடே. காதலர்கள் இருவரும் தங்களது மொபைல் போனை மாற்றி கொள்வதால் ஏற்படும் சண்டையை கருவாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்போதைய காலத்திற்கு ஏற்றாற் போல பெஸ்டி பிரச்சனைகள், சோஷியல் மீடியா பிரச்சனைகள் போன்ற பல விஷயங்களை படத்தில் பேசியிருப்பதால் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பிடித்த படமாக இந்த படம் அமைந்துவிட்டது.

பிரதீப் ரங்கநாதன் முதலில் இயக்கிய படம் ஜெயம் ரவி நடித்த கோமாளி படமாகும். ஆனால் அந்த படத்தை விடவும் லவ் டுடே அதிக வசூல் சாதனை செய்துள்ளது. இந்த படத்தை தயாரிக்க ஆன மொத்த செலவே 5 கோடி ரூபாய்தானாம்.

 இந்த நிலையில் இதுவரை 50 கோடிக்கு ஓடியுள்ளது லவ் டுடே. அதாவது படத்தின் தயாரிப்புக்கு ஆன செலவை விட 10 மடங்கு அதிக லாபத்தை ஈட்டி தந்துள்ளது லவ் டுடே. அஜித்,விஜய் மாதிரியான பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் கூட இந்த அளவிற்கு பத்து மடங்கு லாபத்தை பெற்று தந்தது இல்லை என கூறப்படுகிறது.

மேலும் முதல் படத்திலேயே எந்த கதாநாயகனும் இப்படி ஒரு வசூல் சாதனை படைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Refresh